பக்கம்:இலக்கியச் சாறு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

வ.சுப. மாணிக்கனார்



உடைய இக்கவிதைப் பகுதியில் இராய சொ. இணைக்கும் தனிச் சொற்கள் திருக்குறளின் பொருளை முன்னினும் வளப்படுத்துகின்றன. -

அமைதி-தெரிதலும் தேர்ந்து செயலும் (99) சின்ன-உருவு கண்டு எள்ளாமை வேண்டும் (104) வருந்தி-நவில்தொறும் நூல்நயம் போலும் (108) குணமான-மாறுபாடு இல்லாத உண்டி (111) தேய்ந்த-சிறியார் உணர்ச்சியுள் இல்லை - (113) நன்றுக்கு-இரப்பாரை இல்லாயின் (118)

இம்மேற்கோள்களில் முதலில் நிற்பன தனிச்சொற்கள்; பின்வருவன குறளடிகள். கொண்டியில் தொடுத்தாற் போலத் தனிச்சொற்கள் குறளோடு எவ்வளவு பொருள் படத் தழுவிச் செல்கின்றன!

புதுத்துறைகள்

காந்திக் கவிதையில் காந்தி பிள்ளைத் தமிழ், காந்தியும் வள்ளுவரும், காந்தி யந்தாதி, காந்தி நான் மணிமாலை என்ற நான்கு பகுதிகள் அடங்கியுள.இவை ஒவ்வொன்றும் தனி நூல் வனப்பின. இவற்றுள் காந்தியந்தாதி இலக்கியப் புரட்சி செய்கின்றது. இதுவும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள். அகப்பொருளில் பிரிவுபல கூறல் உண்டு. அப்பிரிவுகளிலும் வேறாகத் தாய் நாட்டுக் கடமைக்குப் பிரிகின்றான் காந்தியந்தாதித் தலைவன். தலைவியைத் தலைவன் பிரிவான் என்று பாடுவதே அகமரபு. ஈண்டோ நாட்டுப் பற்றுக் காரணமாகத் தலைவனைத் தலைவி பிரிந்து சிறைபுகுகின்றாள். இருவருமே வீட்டை விட்டுத் தனித்தனிச் சிறையில் வாழ்கின்றனர். ஒரு சிறையிலிருந்து மறுசிறைக்கு வண்டுத் துரது விடுப. இங்ஙன் துறைகள், புதியவாம்போது துறை விளக்கங்களும் புதியனவாதல் இயல்பே.

எவரும் விரும்ப இசையிடு வண்டே எழுந்துயர்ந்த சுவருள் இருக்குமென் சுந்தரன் தன்னிடம் தூதுசென்று கவரும் நினது கரும்பு சிறையிற் கலைபயின்று தவரும் வியந்திட வாழுகின் றாளெனச் சாற்றுகவே. (பக். 131)