பக்கம்:இலக்கியச் சாறு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 157

கடலாடி, நூறாயிரக்கணக்கான செய்யுட் செல்வர். ஆதலின் இந்நூலுக்குப் பொருட் சிறப்பு வாய்ந்தது போலப் புலமைச் சிறப்பும் வாய்ந்துள்ளது.

இலக்கியக் கூறுகளுள் ஒன்று எடுத்துக்காட்டு நடையாகும். இந்நடையால் ஏற்றமும் இறக்கமும், வாழ்வும் தாழ்வும், பெருமையும் சிறுமையும் தெள்ளிதின் விளங்கும். “கீழ்த்திசைவாயில் கணவனொடு புகுந்தேன்,மேற்றிசைவாயில் வறியேன் பெயர்கென என்று கண்ணகி நல்லாள் முன்னை நிலையைப் பின்னை நிலையோடு இணைத்துக்காட்டும்போது அவலம் பொள்ளெனப் பிறக்கின்றது. உணர்ச்சி கிளர்ந்தெழ வேண்டுமெனின் பாடலில் இரு நிலை அல்லது பன்னிலை வேண்டும். ஒரு நிலைப்பாடல் தன்மை காட்டுமேயன்றி உணர்ச்சிமுடி காட்டாது.

மெத்தையினில் கண்வளர்ந்த மேலோர் எல்லாம்

மிதிப்பதற்கும் தகுதியில்லாக் கயிற்றுப் பாயில் கைத்தலைக்கு வைத்துறங்கும் காட்சியொன்று

கனவினிலும் காண்பதுவோ காந்தி வள்ளால் (217)

புத்துருக்கு நெய்யன்றி வேறு காணாப்

பொருவரிய பெருவாழ்க்கை பூண்டோர் எல்லாம் கைத்துணைஎண் ணெயுமறியா மிடிகூர் வாழ்வைக்

கடனாகத் கருதிடுதல் தரையில் உண்டோ. (218) சிறைவாழ்வு என்ற தலைப்புப் பாடல் பத்தும் இருநிலைப் பாடலாகும்; அவலவுணர்வுப் பாடலாகும்.

சொல்நயம் பொருள்நயம் சான்ற பாடல்களே கவிநயம் உடையனவாகக் கற்கப்படும். இவையில்லாச் செய்யுட்கள் பட்டையடிக்கும் எழுதுகோலை ஒக்கும்; மழுங்கற் செய்யுட்களாகும். -

வேர்மாளத் தீண்டாமை வேண்டியவாறு உரைத்தருளி ஏர்வாடாச் சிறையிருந்த எம்மானும் நீதானோ. (238) என்ற தாலாட்டில் தீண்டாமை என்ற மரத்தின் இலை தழை கிளைகளை வெட்டினாற் போதாது; என்றும் தளிராதபடி வேறாம் மாளவேண்டும் என்று அழுத்தமாகக் கழறுவர். காந்தி