பக்கம்:இலக்கியச் சாறு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

வ.சுப. மாணிக்கனார்



எனக்குத் தமிழ்வாராது என்றுரைக்கும் புன்தமிழர் இனித்த தமிழ்பேசி எழிலுறுநாள் எந்நாளோ? (249) இங்ஙனம் எந்நாட்கண்ணியிலும் கும்மியிலும் தாலாட்டிலும் கடுநடைப் பாடல்களைக் காண்கின்றோம். தமிழ்ப்பற்று

பெருமகன் இராய.சொ. பிறந்து மொழி பயின்ற நாள் தொட்டே சிறந்த தமிழின் சேவடி தொழுபவர்; இனிப்பிறவி எடுத்தாலும் என் அருமைத் தமிழ்நாட்டில் எளியேன் பிறத்தல் வேண்டும் (20) என்று தமிழ்ப் பிறவியை வேண்டுபவர்; அரசியலில் இருந்தபோதும் அதனைத் துறந்தபோதும் தமிழையே மூச்சும் பேச்சும் எழுத்தும் எல்லாமாகக் கொண்டவர்; தமிழுக்கெனத் தோன்றித் தமிழுக்கென வாழ்ந்துவரும் தமிழ்த்தகை. அருந்தமிழன் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளும் பெருந்தகை,

விண்ணவர் மண்ணவர் மற்ற வரும்தொழ

வான்செயல் பலசெய்த வண்தமிழ் கன்னி வளர்த்த செழுந்தமிழ்

வரம்பமை தித்திக்கும்

தேன்சொரி தெய்வத் தீந்தமிழ் (13) சங்கமிருந்து வளர்ந்த பசும்

தனிய இனிய தமிழ்க்கோமான் (15) என்தன் இனிய இருந்தமிழ் (125) எம்மையுலகத்தும் ஈடில் தமிழ்ப்பா (202)

அமிழ்தும் புளிக்குதடி- சகியே

அதனிலும் மிக்க சுவைத் -

தமிழும் கசக்குதடி - (257) இவ்வண்ணம் தமிழின் அரும்ை பெருமை உரிமைகளை உள்ளம் உணர்ந்து அறிவு தோய்ந்து பாராட்டுகின்றார் தமிழ்க் கடலார். கடமையிற் பிரியும் தலைவன், எக்கோவையும் இதுவரை கூறாத முறையில் தலைவிக்கு ஆறுதல் மொழிகின்றான். 'நான் வரும்வரை நீ நம் இனித்த தமிழ் நண்ணும் இலக்கியத்தேன் குடித்து ஆறுக நாயகியே’ (163)