பக்கம்:இலக்கியச் சாறு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

வ.சுப. மாணிக்கனார்



நிறைமொழி மாந்தர் என்னும் அறம்பாடுவார்க்கு இருவகையாற்றல் உண்டு. மாழை கெடுதலையும் செய்யும், அதனை மாற்றி நல்லதையும் செய்யும் தன்மையுடையது என்று திருக்குறள் கூறியதைப் போலவே, சபிக்கும் ஆற்றலும் சபித்ததை உடனே மாற்றியளிக்கும் ஆற்றலும் தெய்வப் புலவர்க்கு உண்டு. சபிக்கும் ஒரு போக்கே கொண்டவர் புலவர் ஆகார், சான்றோர் ஆகார் அல்லவா?

காஞ்சிப் பல்லவன் தன்னைப் புகழ்ந்து பாடும்படி திருமழிசையாழ்வாரைத் துன்புறுத்தினான்.அவர் மறுக்கவே ஊரைவிட்டுப் போகும்படி கட்டளையிட்டான். இவ்வாழ்வார்க்குக் கணிகண்ணன் என்ற மற்றொரு பெயருண்டு. உடனே காஞ்சி வரதராசப் பெருமாளை நோக்கி, நீயும் என்கூடவே ஊரைவிட்டுப் புறப்படு என்று பாடினார். இதனை அறிந்த அரசனும் அமைச்சர்களும் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டினர். அதன்பின், திருமழிசையாழ்வார் தாம் முன்பாடிய வெண்பாவையே பின்வருமாறு மாற்றிமைத்தார்:

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி மணிவண்ணா நீகிடக்க வேண்டும்-துணிவுடைய செந்நாப் புலவனும் செல்லவில்லை நீயுமுன்றன் பைந்நாகப் பாய்விரித்துக் கொள். இத்தகைய பாட்டாண்மைகளைப் பாடுவார் முத்தப்பர் வாக்கிலும் பன்முறை காண்கின்றோம். ஒருமுறை செவ்வூர் சென்றபோது, இவரை யாரும் வரவேற்க வில்லை; முகங்கொடுத்துப் பேசவில்லை, பசியாறியாச்சோ என்று கேட்கவில்லை. பசி, வத்திடப் பத்தும் பறந்து போனாலும், புலவனுக்கோ பாட்டுப் பிறந்து விடும். தமிழிலக்கியவுலகில் வறுமைத்தாய் கருக்கொண்டவுடனே ஈன்று புறம்விட்ட செய்யுட் குழவிகள் பலப்பல. நீர் வறட்சியில் விளைந்த புதுக்கோட்டை முகவைக் காய்கறிகள் சுவையாக இருப்பது போலப் பசி பயந்த பாடல்கள் கொதிப்புச் சுவையுடையவை.