பக்கம்:இலக்கியச் சாறு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 165

எவ்வூர்க்குப் போனாலும் எவ்வுலகிற் சென்றாலும் செவ்வூர்க்குப் போகமனஞ் செல்லாதே-அவ்வூரார் பார்த்திருக்கத் தின்பார் பசித்தார் முகம்பாரார் கோத்திரத்துக் குள்ள குணம். இவ்வாறு பசி கடச்சுட நிலஞ் சுடச்சுட வீதிவழி இசைத்துக் கொண்டே நடந்தார் முத்தப்பர். புலவன் செந்நா கருநாவாகும் என்பதனை உடனே உணர்ந்த அவ்வூரார் அவரை இடைமறித்து உணவூட்டி வளமாக்கிப் பசி போக்கினார். பசியொழிந்த முத்தப்பர் தாமே மனங் கசிந்து அருள்கொண்டு,

எவ்வூர்க்குப் போனாலும் எவ்வுலகிற் சென்றாலும் செவ்வூர்க்குப் போகமனஞ் செல்லுமே-அவ்வூரார் பார்த்திருக்கத் தின்னார் பசித்தார் முகம்பார்ப்பர் கோத்திரத்துக் குள்ள குணம். எனப் புகழ்பட மாற்றிப் பாடினார். அறம் பாடும் ஆற்றல் உடையவரேனும் முத்தப்பர் மழை நலம், ஊர் நலம், புலவர் நலம் வேண்டிப் பாடிய நிகழ்ச்சிகளைக் காண்கின்றோம். நகரத்தாரேயன்றி எல்லாப் பொதுமக்களும்அவரை மதித்தனர். அக்காலச் சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும் அவரை வரவேற்றனர். இருநூறு ஆண்டுகட்குமுன் கவிஞர்களிடைப் புலமைப் போட்டியும் எதிரரங்குகளும் சொற்சிலம்பங்களும் இயல்பாக இருந்தன. இத்துறையிலும் புலமை மிக்கார் மதிக்கும்படி பாடுவார் முத்தப்பர் தமிழ்வாகை சூடிப் பொலிந்தனர்.பாரதிதாசனுக்கு முன்னோடியாக, தமிழ் மேலும் ஆணை என்று பறையறைந்தவர் ஒருவர் உண்டெனின் பாடுவார் முத்தப்பரேயாவர்.

பாடுவாரின் பன்னூற் புலமைக்கும் தமிழ்ப்பற்றுக்கும் கவி விரைவுக்கும் அளவுண்டோ? திருக்குறளிலும் அவ்வை நூல்களிலும் பெருவிருப்பம் உடையவர். மகரநெடுங் கடலுலக வசந்தையைச்

செந்தமிழால் யான்வழுத் துதற்கு அகரமுத லவ்வெழுத்தென் றாயதிலே

முப்பால் சொன்னவன் தாள்போற்றி