பக்கம்:இலக்கியச் சாறு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு - 167

கோழி பிடித்தேன் குறத்திதனை மாலையிட்டேன் பேழை வயிற்றணுக்குப் பின்னானேன்-நீள் கூந்தல் வேடிச்சிக் காய்வனத்தில் வேங்கைமர மாகிமயல் வாடிக்கை மாதருக்கு மாலானேன்-நாடறியத் தந்தைக் குபதேசஞ் சாற்றினேன் அப்பனுக்கு விந்தைக் குருக்களென்றார். மேதினியோர் என்றவாறு வரும் பல அடிகள் இலக்கியநகை யுடையவை. தெய்வங்களே தங்களைப் பிறர் பார்க்கும் பார்வையில் வைத்துப் பேசுவதாக அமைந்துள்ள இலக்கிய நெறி சுவையானது. இரந்த ஒரு தமிழ்ப்புலவனுக்குக் கொடை செய்யமுடியாமல் கந்தன் பேருடைய முருகன் தன் குடும்பத்தவர்களின் குறைகளையெல்லாம் சொல்லுவதும்தான் யாதும் பொருள் கொடுக்கமாட்டாமல் வேறொருவரிடம் போ என்று பரிந்துரை முகம் கொடுப்பதும் நம் நெஞ்சை அள்ளுகின்றன. குன்றக்குடி முருகுத் தெய்வமே தன் அன்பர்களான நகரத்தார்களின் தெய்வப் பற்றையும் செல்வத்தொகையையும் கொடைப் பெருமையையும் வழிவழிச் சிறப்பையும் வாயூரப் பாராட்டுவது தெய்வப்புகழன்றோ? அஞ்செழுத்தை யுட்செபிப்போர் அல்லும் பகலுமெனை நெஞ்சில்விட்டு நீங்காத நிண்ணயத்தார் அன்னைதந்தை தெய்வமுத லாசானைப் போற்றுதலாய் மன்னவரைக் கூட வணங்காதார் o அதிச யிக்கக் காவேரி யாறுதனைப் பஞ்சுப் பொதியால் அடைத்த புகழாளர் சீரகப்பூந் தாரணிந்தோர் சிங்கக் கொடி படைத்தோர் காரிணையாச் செம்பொன் கவிக்கீவோர் எனவரும் கண்ணியடிகள் முருகப்பெருமான் கூறியனவாக இருந்தாலும் பாடுவார் முத்தப்பர் தம் இனத்துக்குச் சூட்டிய முடிகள். சோழபாண்டிய மன்னர்கள் விடுத்த திருமுக வோலைகளை ஊர்ச்சபையர் தலைமேல் தாங்கி ஏற்றுச் சிறப்பித்த பாங்குகளைக் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன.