பக்கம்:இலக்கியச் சாறு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

வ.சுப. மாணிக்கனார்



எடுக்கும் எடுப்பை நினைக்கும்போது அம் முப்புலவர்கூடத் தம்மையும் சேர்த்து ஒரு நாற்புலவராக நாடு எண்ணவேண்டும் என்ற குறிப்பு நம் புலவருக்கு ஒடியிருக்கும். 'திறமான புலமை யெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் எனக் கூறுவரேல், புலமையைப் பற்றி அவர் எத்துணை உயர்வாக மதித்திருக்க வேண்டும்? பிரான்சு, ஆங்கில நாட்டுப் புலவோர் என்தன் தமிழ்க்கவியை மொழி பெயர்த்துப் போற்றுகின்றார்’ எனச் சீட்டுக்கவி விடுப்பரேல், தம் புலமை வணக்கங்கொண்ட புலமையென அவரே பெருமிதம் கொண்டிருந்தது வெளிப்படை. ஆதலின் மக்கட்கு எனப் பாடிய பாரதியார்தம் எளிய பாடல்களில் புலமை காண்பது அரிது என ஒரு சாரார் கருதுவதும், காண்பது தவறு என ஒரு சாரார் கருதுவதும் கொள்ளத்தக்கனவல்ல. “ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்கு உள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்தல் வேண்டும்’ என்பது பாஞ்சாலி சபதத்தின் முகவுரை.

வேதத் திருவிழியாள்-அதில் மிக்க பல்லுரையெனும் கருமையிட்டாள் с என்ற அடிகளில் மறைந்துள்ள புலமை நயத்தைப் பாரதியாரே பின்வருமாறு எழுதியுள்ளார்:

‘மை கண்ணுக்குநல்லது அழகுங்கூட. ஆனால் அளவுக்கு மிஞ்சிப் பூசினால் விகாரமாகத் தோன்றுவதுடன் கண்ணே போனாலும் போய்விடும். அருமையில் எளிமையும் எளிமையில் அருமையும் இருப்பது உலகியற்கை. எளிய பாடல்கள் எல்லாம் வெளிய பாடல்கள் ஆகா.அண்ணாமலை நகரில் ஒரு பாரதி விழாவிற்குத் தலைமை தாங்கிய மகாமகோபாத்தியாய பண்டித மணியார், ஒவியர் மணி இரவிவர்மமேல் பாரதி பாடிய இரங்கற் பாடல்களை ஒவ்வொன்றாகச் சொல்லி, உட்கிடக்கும் புலமை வளங்களை அவையோர் வியக்க எடுத்துக் காட்டினர். பாரி காதை பாடிய மகாவித்துவான் இராகவையங்கார் பாரதியாரின் பாட்டுத் திறத்தைப் புகழ்ந்து உரையாடினார் என்று பண்டிதமணியார்