பக்கம்:இலக்கியச் சாறு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

வ.சுப. மாணிக்கனார்



பொன்ன னாரருள் பூண்டில ராமெனிற் கைக்கி ளைப்பெயர் கொண்ட பெருந்துயர்க் காத லஃது கருதவும் தீயதால் எனப் பொருளிலக்கணம் பற்றிய ஒரு திணையை விளக்கிப் பேசுகின்றார் பாரதியார். அவர் சங்கத்தமிழ் கற்றவர் என்பது அகநானூற்றிலக்கியங்களை விலைக்கு அள்ளி வந்த கதையால் அறியலாம். வியாச பாரதத்தையும் வில்லி பாரதத்தையும் ஒப்புறழ்ச்சி செய்து கற்றுப் பாஞ்சாலி சபதம் இயற்றினார் என்பது தெளிவு. ஆழ்வார், நாயன்மார், திருமூலர், பட்டினத்தார், தாயுமானார் பாடல்களை நன்கு பயின்றவர் என்பதனைப் பாரதிதம் சமயப் பாசுரங்களே காட்டும். என்றாலும், பாரதி தாம் கற்ற நூற்கருத்துக்களுக்கு அடிமைப்பட்டவர் அல்லர் படிக்கும் ஆற்றலினும் படைக்கும் ஆற்றல் மிக்கவர்; கற்கும் அமைதியினும் கவிசெய்யும் வெறிகொண்டவர். அப்பரும் பாரதியாரும்

பாரதியாரின் சமயக் கருத்துக்கள் பல நாவுக்கரசரின் கருத்துக்களோடு ஒத்துள்ளன. தேவாரத்தின் பொருளும் சொல்லும் பாரதி பாடல்களில் கலந்திருப்பக் காண்கின்றோம்.

மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும் விண்பால் திசைகெட் டிருசுடர் விழினும் அஞ்சல் நெஞ்சே -அப்பர்

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே - பாரதி

சிறு தெய்வ வணக்கம் இருவர்க்கும் உடன்பாடன்று. ஒரு பெருங்கடவுள் சிவனே என்பது அன்னவர்தம்கோட்பாடு. 'சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்’ என்ற தேவாரத்தின் விளக்கமாக, மாடனைக் காடனை வேடனைப் பற்றி மயங்கும் மதியிலிகாள்’ எனப் பாரதியில் வருவதும்; 'சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்’ என்பதன் சான்றாக, 'சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளிரோ எனப் பாரதியில் வருவதும் ஒப்புமையாகும். நாவுக்கரசர் பாராண்டு பகடேறி வருவார் சொல்லும்