பக்கம்:இலக்கியச் சாறு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 177

ஒப்புமைப்பதிப்பு -

பாரதி கவிதைத் தொகுதிக்குப் புத்தம் புதியதோர் பதிப்பு இனி மிக இன்றியமையாதது. சங்க நூல்களுக்கும் பிற நூல்களுக்கும் உ.வே.சா.செய்த பதிப்புக்களைக் காணுங்கள். அவைபோல, ஒப்புமைகளும் மேற்கோள்களும் கொண்ட பாரதி பதிப்பு ஒன்று வருவதைத் தமிழுலகம் விரும்பி யேற்கும். இம்மேற்கோட் பதிப்பு பாரதியின் புலமையை நாடறியச் செய்யும். பாரதியார் ஒரளவு தமிழ் கற்றவளவில் நிரம்பப் பாடிவிட்டார் என்றும், கவிஞர் ஆவார்க்கு நூற் பயிற்சி அத்துணை வேண்டியதன்று; பாரதியைப் பார் என்றும், பாடிக்கொண்டேயிருந்தால் புலமை வந்துவிடும் என்றும் இளங்குழுக்கள் படிறு கொண்டு வளரப் பார்க்கின்றன. யாப்பிலக்கணம் கற்றபின் பாடும் ஆசையோடு, பெருந்தமிழ் நூல்களின் பாவெள்ளத்தில் மூழ்கி எழுந்து பாடும் ஆசையோ இளந்தமிழ்க்கவி உள்ளங்களில் தோன்றவில்லை.சொல்லாலும் தொடராலும் பொருளாலும் முன்னைத் தமிழ்ப் பனுவல் களோடு ஒப்பிட்டுக்காட்டும் ஓர் ஆராய்ச்சிப் பதிப்பு பாரதீயத்துக்கு வந்தால், வருங்காலத் தமிழ் வளர்ச்சியில் ஒரு நன்மரபு ஏற்படும்; மயக்கம் அகலும்; பாரதியைக் கற்கு முறையிலும் ஒரு செம்மை மக்களிடம் காணப்படும். இம்மேற்கோட் பதிப்பில் பாரதிக்குப்பின் வந்த நூல்களி லிருந்தும் ஒப்புமை காட்டவேண்டும்; அதனால் பாரதியின் செல்வாக்கு வெளிப்படும். - சொற்கிடப்பு

தன் மனத்திற் பதிந்த பொருளைக் கற்பவர் மனத்திலும் பதிக்கவல்ல மொழியர்ற்றலே புலமை எனப்படும். சிலப் பதிகாரம் நெஞ்சை அள்ளியதாகப் பாரதியார் சுட்டுவர். இக்கருத்துப் பதிப்பிற்குப் புலவன் ஆளும் நெறிகள் பலதிறத்தன. அப்புலமைக் கூறுகளுள் ஒன்று சொல் வீழ்ச்சி. புலவன் பாடலில் தொடுக்கும் ஒவ்வொரு சொல்லும் பொருட்கு இன்றியமையாச்சொல் என்றும், மாற்றினால் நயம் கெட்டுப்போம் என்றும் கூறுப. அங்ஙனம் கூறின் எல்லா

கி.12.