பக்கம்:இலக்கியச் சாறு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

வ.சுப. மாணிக்கனார்



வடக்கில் இமயமலை பாப்பா-தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா குமரிமுனைக்கு'வாழும் என்ற அடைகொடுத்ததன்கருத்து என்ன? தமிழகத்தின் தென்னெல்லை கடல் கோளால் அழிந்து குறுகி வந்த நிலவரலாற்றைப் பாரதியார் அறிவர்.இப்போதுள்ள குமரி முனை இனியும் அழியாது வாழவேண்டும் என்பது அவர் ஆசை.அவ்வாசையை ‘வாழும் என்ற சொல்லால் புலப்படுத்துவர். நீலத்திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவஞ் செய் குமரி. ஒரத்திலே ஏன் நிற்கின்றாள்? தவம் ஏன் செய்கின்றாள்? இவ்வோரத்தோடு கடல்கிடக்க வேண்டும், முன்னேறி அழிக்கக் கூடாது என்பதுவே தவத்தின் நோக்கம் என இப்பாடலுக்கு விபுலானந்த அடிகள் நயங்கூறினாரெனச் சொல்லுப.

வரை,சிலம்பு, அடுக்கம், குன்று, ஓங்கல் என்று பல சொற்கள் மலையின் பொருளாக வரும். அவற்றுள் வெற்பு என்பது ஒரு சொல். ஒரு நாட்டிற்கு மலையரண் இருக்குமாயின், வெற்றி எளிதில் பெறலாம். மன்னும் இமயமலை யெங்கள் மலையே மாநில மீதது போற்பிறி தில்லையே எனப் பாரத நாட்டின் முதற்பெருமைக்கு உரியதாக இமயமலையைப்போற்றுவர் புலவர்.இது வடவரணாய் நின்று இந்திய நாட்டைக் காக்கின்றது. வடக்கே வந்து இதனை வென்றார் யாரும் இலர். அங்ஙன் வெற்றித் திருவுடைய இமயத்தையும் தெற்கே யாண்ட தமிழ் வேந்தர்கள் வென்ற வரலாற்றை இலக்கியங்கள் பாடுகின்றன.

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் வெற்பை யடிக்குந் திறனுடையார் என்று தமிழ்மறம் பாடும் பாரதியார்.இமயம் எனும் வெற்பு என்று சொல்லாளுதல் நோக்குக. வெற்பு என்னும் தொழிற்பெயர் முதற்கண் வெற்றியைக் குறிக்கும்; அரனாய் நின்று வெற்றிதரும் மலைக்கும் பெயராகும்.

ரு கு கு

ஒசையின்பம் > -

ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே ஒசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ -பாரதி.