பக்கம்:இலக்கியச் சாறு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 181

ஒலியின் கூட்டமே சொல்லாகும். ஆதலின் புலவன் ஒலி நயத்தாலும் கருத்தைப் புலப்படுத்துவான். அதற்கு நாம் அவன் பாடல்களை வாய்விட்டுப் படிக்கவேண்டும். சந்தியிரியாதும் எதுகைமோனை கொல்லாது சொல்லிப் பார்க்க வேண்டும். அப்போது கருத்து செவி வழியாக நெஞ்சிற் பாயும். சுவை நண்ணும் பாட்டினொடு தாளம், மிக நன்றாக உளத்தழுந்தல் வேண்டும் என்று சத்தியிடத்து வரங்கேட்ட பாரதியின் கவிகளில் ஒலி நயத்திற்குக் குறைவேயில்லை.

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே இப்பகுதியில் மெல்லிய வண்ணமும் னகரவொலிகளும் அமைந்திருத்தலால், தமிழின் இனிமை சொல்லானேயன்றி ஒலிநயத்தானும் விளங்கும்.இராவணன் பாடினும் இப்பாடல் இனிமை குன்றாது. பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே’ என வல்லொற்று இரட்டித்து நிற்றலால், வீரப்பொருள் தானே வெளிப்படுகின்றது.

உச்சிமீது வானிடிந்து விழுகின்ற போதினும் சீர்தோறும் தொடங்கும் நெட்டொலிகள் அச்சத்தின் ஏற்றத்தையும், அடுத்துவரும் குற்றொலிகள் அதன் இறக்கத்தையும் புலப்படுத்துவன.

வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த தொடித்தோட் டென்னவன் கடிப்பிகு முரசே (2914-16) என்ற சிலப்பதிகார அடிகளில் முரசின் முழக்கொலியைக் கேட்கின்றோம். அதுபோலவே பாரதியும் 'வெற்றியெட்டுத் திக்குமெட்டக் கொட்டு முரசே எனப் பறையறைகின்றார். இங்ஙனம் முரசுப் பாடல்களில் டகாரவோசை கட்டாயம் இடம் பெறுதலாற்போலும், டமாரம் என்பது (டகாரத்தின் திரிபு) முரசக்கு ஒர் பெயராயிற்று. 'டொண்டொண்டொண் என்னும் பறை (2.5) என்ற நாலடிச் செய்யுளை ஒப்பு நோக்குக. இயக்கநடை

பாட்டின் இயக்கம் நடை எனப்படும். புலவன் கருதிய பொருளைச் சொல்குறிக்கும்:ஒலிஉணர்த்தும் நடைஎடுத்துக் காட்டும். ஒருவன் விரைந்து நடப்பதிலிருந்து காரியத்தின்