பக்கம்:இலக்கியச் சாறு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

வ.சுப. மாணிக்கனார்



விரைவைப் புரிந்துகொள்கின்றோம். பைய நடக்கவும் தேற்றாயால், நின்பெண்மை ஐயப்படுவது உடைத்து’ என நடைக்கும் பண்புக்கும் தொடர்பு கட்டுகின்றார் முத்தொள்ளாயிரவர். புகழை விரும்பிய மனைவியை யுடையானுக்கே ஏறுபோற் பீடு நடை இருக்கும் என்கின்றார் வள்ளுவர். கண்ணகியைத் தனிமையில் வைத்துப் பிரியும் கோவலன் நடை தளர்ந்தான் என எழுதுகின்றார் இளங்கோ

அருமையான செல்வம்-என்பால் அளவிலாத துண்டு ஒருமடங்கு வைத்தால்-எதிரே ஒன்பதாக வைப்பேன் என்று உருளுகின்றது. பாஞ்சாலி சபதத்தின் சூதாடு பாட்டு. 'சூதாட்ட வருணனைக்கும் அதில் ஏற்படும் பரபரத்த வார்த்தைகளையும் செய்கைகளையும் விளக்குதற்கும் இந்நடை மிகவும் பொருந்தியது என்பது எளிதிலே காணப்படும் என்று பாரதியாரே நடைபற்றி விளக்கம் தருகின்றார். எனவே பொருளுக்கேற்ற நடைகளைத் தேர்ந்து பல பாடல்களை ஆக்கியிருப்பார் என்றும், அப்புலமைத் திறத்தைக் கண்டறிந்து கற்றல் நம் கடமை என்றும் தெரியவேண்டும்.

ஒடி விளையாடு பாப்பா - நீ ஒய்ந்திருக்க லாகாது பாப்பா என்ற பாட்டு குழந்தைக்கேற்ற கொஞ்சு நடையாகும். ‘ஆடுவோமே. பள்ளுப் படுவோமே என்ற அடி யார் தலையையும் ஆட்டிவைக்கும் கூத்து நடையாகும். “சுற்றி நில்லாதே போ, பகையே’ என்பது எச்சரிக்கை நடையாகும். தாரையடிநீஎனக்குதண்மதியம்நான் உனக்கு என்பது காதல் நடை 'முன்னை யிலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடைய வில் என்பது பெருமி நடை. நெஞ்சு பொறுக்குதிலையே' என்பது ஏளனநடை வலிமையற்ற தோளினாய் போ போபோ ள்ன்பது சின நடை மதலையர் எழுப்பவும் தாய் துயில்வாயோ' என்பது அன்பு நடை “பகைவனுக்கு அருள்வாய்' என்பது ஆண்மை நடை.