பக்கம்:இலக்கியச் சாறு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 185

குருடர்களாய் வாழ்கின்றோம்’- வாழ்கின்றோம் என்பதுவா புலவன் கருத்து? ஐம்புலன்களில் பேச்சு, கேள்வி, பார்வை என்னும் சிறந்த மூன்றை இழந்து விட்டீர்கள்; உடம்பை வளர்த்து ஏதோ மூச்சு விட்டுக்கொண்டிருப்பதால், நீங்கள் இன்னும் சாகவில்லை என்று சொல்ல வேண்டியிருக்கின்றது; இதுவா வாழ்க்கை? என இடித்துரைப்பதுவே புலவன் நோக்கமாகும்.

புத்தம் புதிய கலைகள்-பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே-அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவுங் கூடுவ தில்லை- அவை

சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த

மேற்கு மொழிகள் புவியிசை யோங்கும். என்றந்தப் பேதை யுரைத்தான்-ஆ!

இந்த வசையெனக் கெய்திட லாமோ சென்றிடுவி ரெட்டுத் திக்கும்-கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர். இம்முப்பாடல்களையும் தொகுத்து நோக்கும்போதுதான் புலவன் உட்கிடைஇதுவெனப் புலப்படும்..அறிவியல் நூல்கள் தமிழில் இல்லை.2.அறிவியலைச் சொல்லும் ஆற்றல் தமிழுக்கு இல்லை என்பவை ஒருவன் வெளியிட்ட கருத்துக்கள். அவன் முதற்கருத்தில் தவறொன்றுமில்லை. கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்குச் சேர்ப்பீர்' என்று ஏவுவதிலிருந்தே பேதை என்பான் கூறிய முதற்கருத்தை அறிவியற் பனுவல்கள் தமிழில் இல்லை என்பதைப் பாரதியாரும் ஒப்புகின்றார் என்பது தெளிவு. தமிழுக்குச் சொல்லாற்றல் கிடையாது:சாகும் என்று மற்றொரு கருத்துக் கூறினானே அவன்! அதற் காகத்தான், அந்தப் பேதை யுரைத்தான் என்று ஒரு வசவுச்சொல் கொடுத்தார் பாரதியார். மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று அவன் சொல்லிய ஈற்றுச் சொல்லைக் கேட்ட ஒரு தமிழன்பருக்கு நெஞ்சுபொறுக்கமுடியுமா?"கொன்றிடல்