பக்கம்:இலக்கியச் சாறு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 189

தொல்காப்பியரே வகுக்கும் வண்ணம் அத்துணை வழக்குப் பழமையுடையது தமிழகம். புதுமைக்கவி என்று பாரதியை நாடு புகழ்கின்றது. 'சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொற் புதிது’ எனப் பாரதியாரும் சொல்லிக் கொள்கின்றார். இப்பெருமைக்கு அவர் உரியவரே என்று. நாம் இசைக்கின்றோம் என்றாலும் ஆழ்ந்த நோக்கின், பாரதியின் புதுமைகள் பழமை யுரத்திலிருந்து மலர்ந்தன என்பது புலப்படும். ஒரு பெரும் புலவன் இறந்தகாலத் தளத்தின்மேல் நிகழ்காலக் கண்கொண்டு நாட்டின் எதிர்கால வாழ்வை உருவாக்குவான். அவன் படைப்பு தஞ்சைப் பெருவுடையார் கோயில் அனையது. ஆதலின் தொல்காப்பியப் பெருநூலில் புதுமை காண்பது தவறன்று பாரதிப் பெரும் புலவனிடத்தும் பழமை காண்பது தவறன்று. காலச் சூழ்நிலை - -

ஒருநாட்டில்பெருங்குறைகள் மலிந்துதோன்றிய காலத்து, அவற்றை எடுத்துக் காட்டும் பாடல்கள் முகிழ்க்கும். அவை புதுமைப் பாடல்கள் என்று பெயர் பெறும். தொல்காப்பியர், சங்கத்தார் நாளில் பற்றுாட்டும் நாட்டுப் பாடல் பிறக்கவில்லை; காரணம் தமிழ்நாடு அடிமை நாடாக இருந்ததில்லை. மொழிப்பற்றுரட்டும் பாட்டு அறவேயில்லை; அதற்குக் காரணம், தமிழர் பற்றுக் கொள்வதற்குத் தமிழ்மொழி தவிர வேறு மொழி ஈண்டு வழங்கியதில்லை.

ஆடுஉ வறிசொல் மகடுஉ வறிசொல் பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி அம்முப் பாற்சொல் உயர்தினை யவ்வே (தொல், 485) என்ற முதனுாற்படி, ஆணும் பெண்ணும் ஒத்த உயர் திணையாகவே கொள்ளப்பட்ட அறிவுக்காலம்.அது.ஆதலின், பெண்ணுரிமைப்பாட்டுக்குப் பிறப்பில்லை. இறை இருந்தது: ஆனால்மதம் இருந்ததில்லை.தொழில்இருந்தது.ஆனால்சாதி இருந்ததில்லை. எனவே மதவொற்றுமைப்பாட்டிற்கும் சாதி யொழிப்புப் பாட்டிற்கும் பண்டு 'வாய்ப்பில்லை. சங்க நாளைக்குப் பின்னர் ஊழல்கள் அரும்பின. சங்கம் அழிந்தது: தமிழ் வேந்து அழிந்தது; இருந்த இலக்கியங்களிற் பல