பக்கம்:இலக்கியச் சாறு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 191

வடக்கில் இமயமலை பாப்பா-தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா பேரிமய வெற்புமுதற் பெண்குமரி யிறாகும் ஆரிய நாடென் றறி நாட்டுக்கு எல்லை வரையுமுகத்தால், தம் தமிழ்ப் பாட்டுக்கும் வழக்கெல்லை சுட்டுகிறார் புலவர். பாரதியின் பாரதப் பாடல்கள் தமிழ் மொழிக்குப் புதியவை. தமிழ் மொழியில் இருந்தாலும் திருக்குறள் மக்கெட்கெல்லாம் பொதுவன்றோ! பாரதிப்பா இந்திய நாட்டுப் பொது என்பதனை எல்லோரும் அறியச் செய்தல் தமிழர் கடன், அது தமிழ் மொழியில் இருத்தலின்.'தாயின் மணிக்கொடி என்னும் கொடி. வாழ்த்து இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டு எங்கும் இசை பெறுதல் வேண்டும். நாட்டுப்பற்றை மக்கட்கு ஊட்டுவதெப்படி? விடுதலையுணர்ச்சியை விதைப்பது எங்ஙனம்? பாரதம் பழம்பெரு நாடன்றோ? பாருக்குள்ளே நல்ல நாடில்லையா? ஞானத்திலும், கானத்திலும், வீரத்திலும், ஈரத்திலும், நன்மையிலும், வன்மையிலும், ஊக்கத்திலும், நோக்கத்திலும், துண்மையிலும், உண்மையிலும் உயர்ந்த நாடன்றோ வரலாற்றறிஞர்களும் பிறந்தநாள் அறியமாட்டாப் பழந்தாய் இல்லையா! நாம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததும், நம் அன்னையர் தோன்றி மணந்ததும், நம்மை ஈண்டு வளர்த்ததும் இந்நன்னிலம் காணtர் இந்நாட்டை வந்தனை செய்து மனத்திலிருந்து வாயுற வாழ்த்தி வணங்குவம் வாரீர் என்று பற்றுட்டுகின்றார் புலவர் பெருமகன். முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும் இன்று புதிதா யிரக்கின் றோமோ முன்னோர் அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஒராயோ அடிமைதான் எங்கட்குப் புதிதேயொழிய விடுதலை புதிதன்று என வீறு பேசுகின்றார், ஒராயிர வருடம் ஒய்ந்து கிடந்துவிட்டோம் என்று இடைக்காலத்து வந்த இழிவை எடுத்துக் காட்டுகின்றார்.