பக்கம்:இலக்கியச் சாறு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

வ.சுப. மாணிக்கனார்



விடுதலை பாரதியின் மதம். பாரதியார் விடுதலைப் புலவர், விடுதலை நாயனார், விடுதலை யாழ்வார். சிட்டுக் குருவியைப் போலே எப்போதும் விடுதலை வேண்டுபவா. ஆதலின் தெய்வப் பாசுரங்களின் நடை பாரதியின் விடுதலைப் பாசுரங்களிலும் காணப்படும். சமயத் துறை நடையில் ஒரு கொள்கையைப் பரப்பினாற்றான், இந்நடையில் மக்களுக்கு ஏற்கும் தன்மை உண்டு என்று கண்டுகொண்டார் பாரதியார். சிவன், கண்ணன், இராமன் என்ற பெயர்களைக் கூறியவளவில் பிறவித் துன்பம் எல்லாம் அறும் எனச் சுட்டுதலும், மதத்தொண்டர்களைப் போற்றிப் புகழுதலும் சமய மரபு. இம்மரபு தழுவி விடுதலைமதம் பாடினார்.விடுதலைத் தொண்டர்களைப் பாடிப் பரவும் சுந்தரராயினார் பாரதியார்

பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்-மிடிப் பயங்கொல்லுவார் துயர்ப்பகை வெல்லுவார் துஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே தொண்டி ழைக்கத் துணிந்தவர் யாவரும் அஞ்செ ழுத்தினைச் சைவர்மொ ழிதல்போல் அன்பொ டோதும் பெயருடை யாரியன் தமிழ்த்தனிமுழக்கம்

பாரதப் புலவன் பாரதியார் ஒர் தமிழ் மகன்; தமிழாலே உலகத்தை நினைப்பவர்; தமிழக நாட்டவர்; ‘வாழ்க நற்றமிழர்” என்று வாழ்த்தும் இனப்பற்று உடையவர்; தம் இனமக்கட்கு விடுதலை வேட்கையையும் மொழிப்பற்றையும் குழைத்து ஊட்ட விரும்பிய பாரதியார் பாடல்களில் நாம் காண்பதென்ன? சிங்களம் புட்பகம் சாவகம் ஆகிய தீவுகளை வென்று புலிக்கொடியும் மீனக் கொடியும் ஏற்றிய தாய்நாடு தமிழ்நாடு என்று தென்திசை கீழ்த்திசை வெற்றிகளைக் கூறுகின்றார். இமயத்தைத் தாக்கிய வீரர் வாழ்ந்த தமிழ்நாடு என்று வடதிசை வெற்றியைச் சுட்டுகின்றார். பாரத நாட்டுணர்வுடைய பாரதியார் தமிழகத்தின் சிறப்பைப் பாடும் வரிசையில் இமய வெற்றியையும் கலிங்க வெற்றியையும் ஒதுக்கிவிடாது கூறுதல் குறிப்பிடத்தகும். சீன மிசிர யவன