பக்கம்:இலக்கியச் சாறு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

வ.சுப. மாணிக்கனார்



சதும றைப்படி மாந்த ரிருந்தநாள் தன்னி லேபொது வான வழக்கமாம் பாரதியின் புதுமைப்பெண்ணே இங்ஙனம் பழமை பேசுவாள் எனில், பாரதீயத்துக்கு அடிப்படை (அண்மைப் பழமையன்று) தொன்மைப் பழமை என்பது தெளிவு. புதிய ஆத்திசூடியும் கண்ணன்பாட்டும் பாஞ்சாலி சபதமும் முற்றும் புதியனவல்ல; புதுப்பிக்கப்பட்டன என்பது முன்னை நூல்களோடு ஒப்பிட்டுக் காண்பார்க்கு எளிதாகப் புலப்படும். கண்ணன் பாட்டுக்கு வவேசு அய்யர் எழுதிய முன்னுரையைக்

காணுக. - - - புதுப்பார்வை

தொல்காப்பியன் முதல் பாரதி ஈறான தமிழ்ப் புலவர்கள் பழமைப் பார்வையுடையவர்களே என்றாலும், அப்பார்வையி லிருந்து ஒவ்வொருவரும் உலகிற்குக்காட்டிய புதுமைப்போக்கு வேறு வேறாகும். தமிழ்ப் புலவர்களுள் சிலர்தம் புதுமைப் போக்கு ஒற்றுமை யுடையதாய்க் காணப்படுகின்றது. பாரதிப் புலவன் புதுமைப் போக்கோ இதுவரை தமிழ் இலக்கியம் கண்டறியாதது. பழமையை அவர் பார்த்த பார்வையே வேறு. தமிழ் மொழியின் சிறப்புப்பற்றி முன்னும் பாடல்கள் உள; என்றாலும், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் என்னும் பாரதி உறுதிப்பாட்டிற்கு இணையுடையது ஒன்று உண்டோ? திருக்குறளுக்குத் திருவள்ளுவ மாலையில் ஐம்பத்து மூன்று பாராட்டு வெண்பாக்கள் உண்டு. அசரீரி, நாமகள், இறையனார் எல்லாருந்தான் அந்நூலைப் பாராட்டியுளர்; என்றாலும்,

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து -- வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்னும் பாரதி பாட்டுக்கு ஒப்பில்லை. வள்ளுவன் தமிழ் நாட்டின் கொடைப் பொருள் என்று மொழியோடும் நாட்டோடும் வைத்துப் புகழ்ந்த புலவன் வேறெவன்? உலகச்செல்வம் அத்தனையும் ப்டைத்த ஒரு நாடு தமிழ்நாடு என்றும், புகழ் மண்டிக்கிடக்கும் ஒரு நாடு தமிழ்த் திருநாடு என்றும் வளம்ாரச்சொல்லிய பாரதியின் தமிழுக்கு முன்னைத் தமிழ் நூல்களில் ஒப்புமை காட்டமுடியுமா? பாரதி கவிதைக்கு