பக்கம்:இலக்கியச் சாறு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. பாரதியின் தேசிய வொருமை

எல்லாரும் ஒர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள் எல்லாரும் ஒர்நிறை எல்லாரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க என்று பறையறைந்தாற்போல ஒருமைப்பாடல் முழக்கியவர் பாரத தேசியக்கவி பாரதியார். அவர் உறுதி மொழியாக மும்முறை பாடிய முழக்கத்தினால் எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற தொடரும் கருத்தும் யார்வாயிலும் இயல்பாகக் கேட்கப்படுகின்றது. கவிஞர் பெருமான் பாடிய காலத்தில் பாரத மக்கள் ஒருகுலமாக, ஒரினமாக, ஒரு நிறையாக, ஒரு விலையாக, இந்நாட்டு மன்னராக இருந்ததில்லை. 1947இல் பாரத நாடு விடுதலை பெறுவதற்கு முப்பது ஆண்டுகட்கு முன்பே எல்லோரும் சமம் என்று பாடி முடித்தார் பாரதியார். விடுதலை பெற்று முப்பது ஆண்டு ஆகிய இன்றும் குலத்தினாலோ இனத்தினாலோ பொருளாதார வளத் தினாலோ சமம் பெறவில்லையே என்று எண்ணிப் பார்க்க வேண்டும். பாரதி கண்ட கனவு இன்று வரை கனவாகவே இருக்கின்றது. அக்கனவுநிலை இன்பங்கூடக் கலைந் தொழியுமோ என்ற அச்சம் பிறந்திருக்கின்றது. அவர் கண்ட கனவு நனவுத்திருவாக வேண்டுமேல் பாரதியின் தேசியப் பாடல்களைப் பாரத மக்கள் பல்லாண்டு படிக்க வேண்டும். அவர் பாடல்கள் தமிழ் மொழியில் இருந்தாலும் பாடப்பட்ட பொருள் தேசிய ஒருமைப்பாடு ஆதலால் எல்லா இந்திய மொழிகளிலும் இப்பாடல்கள் நல்ல பண்களில் மொழி

கோயம்புத்துர்வானொலிப் பொழிவு