பக்கம்:இலக்கியச் சாறு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

வ.சுப. மாணிக்கனார்



பெயர்க்கப்படல் வேண்டும்.இந்தியநாட்டின் சிறு பள்ளிகளில் எல்லாம் இப்ாடல்கள் முழக்கம் பெறல் வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டினை விடுதலையுரிமைபெறுவதற்காகமட்டும் பாரதி பாடவில்லை. விடுதலைக்குப் பின்னும் மக்கள் சரிநிகர் சமானமாக ஒத்த மதிப்புப் பெற வேண்டும் என்பதுதான் அவர் குறிக்கோள். -

திறமைகொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழ்வமிந்த நாட்டிலே வாழி கல்வி செல்வமெய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒருநிகர் சமானமாக வாழ்வமே வையவாழ்வு தன்னிலெந்த வகையினும் நமக்குளே தாதர் என்ற நிலைமைமாறி ஆண்களோடு பெண்களும் - சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே

உரிமை பெற்றபின்

இந்தியா ஒருநாள் உரிமை பெறுதல் உறுதி என்று முன்னறிவால் தெளிந்த பாரதியார் தம் கவிதைகளில் உரிமை பெற்ற இந்தியாவும் இந்திய மக்களும் வாழ வேண்டிய வகைகளைப் பல செய்யுட்களில் புலப்படுத்தியுள்ளார். இமயமுதல் குமரிவரை பாரதம் நிலத்தோற்றத்தில் ஒன்றாக இருந்தாலும், மக்கள் உள்ளத்தில் ஒருமையுணர்வு வேண்டுமல்லவா? அடையாததற்கு முன்னே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று உரிமைப் பள்ளுப் பாடிய தேசியப் பாவலர் பாரதியார், உரிமை பெற்றபின் நாட்டில் என்ன எண்ணங்கள் பரவவேண்டும் என்று தொகுத்துச் சொல்லுகின்றார். . . .

எங்குஞ் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் எல்லோரும் சமம்என்ப துறுதி யாக்க , எல்லோரும் ஒன்றென்னுங் காலம் வந்ததே - பொய்யும் ஏமாற்றுந் தொலைகின்ற காலம் வந்ததே உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வினில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்