பக்கம்:இலக்கியச் சாறு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

வ.சுப. மாணிக்கனார்



ஆட்சி விடுதலை நமக்குக் கிடைத்து விட்டது. இன்னொரு விடுதலை-சாதி முதலியவற்றின் விடுதலைக்கு நாம் பாடுபட்டு, கொண்டிருக்கின்றோம். இந்த விடுதலை தேசிய ஒருமைப்பாடு என்ற உணர்வினாற்றான் பெற முடியும். அத்தகைய ஒருமைப் பாட்டுக் கல்வியைத் தருங்கருத்துக்கள் பாரதீயத்தில் மண்டித் கிடக்கின்றன.

பாரதவொருமை

பாரதநாடு, பாரத அன்னை நவரத்தினமாலை, பாரத தேவியின் திருத்தசாங்கம், பாரத சமுதாயம், தாயின் மணிக்கொடி என்ற தலைப்புடைய பாடல் எல்லாம் பாரதியாரின் ஒருமைக் கனவை வடித்துக் காட்டுகின்றன.

பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே - ஜய ஜய ஜய t முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக் கொரு புதுமை - வாழ்க மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ மனிதர்நோக மனிதர்பார்க்கு வாழ்க்கை இனியுண்டோ புலனில் வாழ்க்கை இனியுண்டோ? - நம்மிலந்த வாழ்க்கை இனியுண்டோ? இனிய பொழில்கள் நெடியவயல்கள் எண்ணரும் பெரு நாடு கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தருநாடு - இது கணக்கின்றித் தருநாடு - நித்த நித்தம் கணக்கின்றித் தருநாடு. இனியொரு விதிசெய்வோம் அதை எந்த நாளுங் காப்போம் தனியொருவனுக் குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் பாரத சமுதாயம் வாழ்க என்ற இப்பாட்டு தேசிய ஒருமைப்பாட்டிற்குப் பெரிய வேராகும். ஏன்? உலக வொருமைப் பாட்டிற்குக் கூட இப்பாடலில் கரு அமைந்து கிடக்கின்றது. பல மாநிலங்களாகப் பிரித்துக் கூறாமல் பாரத சமுதாயம் எனவும், பல சங்கங்களாகப் பிரிவு படுத்தாமல் முப்பது கோடி உறுப்பினர்களைக் கொண்ட சங்கம் எனவும், பல தனியுடைமைகளைப் பாராட்டாமல் முழுமைக்கும் பொதுவுடைமை எனவும், இத்தகைய பொதுச் சமுதாயமும்