பக்கம்:இலக்கியச் சாறு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

வ.சுப. மாணிக்கனார்



காரணமாக வலுப்பெற்று வருகின்றதேயன்றிக் குறைய வில்லையே. சாதிப்பற்றையும் சமயப்பற்றையும் தூண்டி விட்டுத்தானே வாக்குக்கள் கேட்கப்படுகின்றன.

--> ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்

ஜன்மம் இத்தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே - அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர்'வந்து புகலென்ன நீதி என்றபாட்டிலிருந்து சாதிவேற்றுமைகள் பெருகினால்வேற்று நாட்டவர் புகுந்து விடுவார்கள் என்ற கருத்தும், வேற்றுமை நீங்கி எல்லாரும் இந்தியர் என்று ஒன்று பட்டால்தான் வாழ்வு உண்டு; ஒற்றுமை நீங்கினால் எல்லார்க்கும். தாழ்வே என்ற எச்சரிக்கையும் , தெளிவாகின்றன. சாதிப்பற்று குழந்தைகளிடத்து வளரக்கூடாது. எதிர்காலத்துப் பிறக்கும் குழந்தைகளாவது சாதி மனப் பான்மையின்றி உயரவேண்டும் என்பதற்காகத்தான், .

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம். o , - என்று குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பர் இந்தியக்கவிஞன் பாரதி.

சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார் நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு தன்னில் செழித்திடும் வையம் . . . . . . . என்று சாதிக்கொடுமையை முரசறைந்து சாடுவர் பாரதியார் இன்னொரு செய்யுளில். எனவே, சாதிகள் இல்லாத, சாதிப் பூசல்கள் முளைக்காத ஒரு பாரத நாட்டை உண்டாக்கி னாற்றான் தேசிய ஒருமைப்பாடு என்ற விளைவு கிடைக்கும் எனத்தெளிவோமாக.