பக்கம்:இலக்கியச் சாறு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

வ.சுப. மாணிக்கனார்



பாரதத்தாய் வளமான பதினெட்டு வழக்கு மொழியுடையாள் எனவும் பாரத மக்கள் தங்கள் தங்கள் மொழிகளால் அவளை வாழ்த்தித் திருப்பள்ளியிலிருந்து எழுப்புகின்றனர் எனவும் பாடுவதனால் பாரதப் புலவர் பாரதியார் இந்தியாவில் பன்மொழி வளத்தை உடன்படுகின்றார் என்பது தெளிவாகும். மேலும் வேறுபட்ட அம்மொழிகள் சிந்தனையினால் வேறுபடக் கூடாது; தேசிய ஒருமைச் சிந்தனை ஒன்றே வேண்டும் என்று உறுதியாகக் கூறுகின்றார் என்பதும் தெளிவாகும்.

இனவொருமை

பல மொழிகளை வரவேற்றது போலவே பாரத ஒருமைப் பாட்டிற்குப் Լ16Ն) இனங்களையும் வரவேற்று

வழிகாட்டியுள்ளார் பாரதியர்.'தாயின் மணிக்கொடி பாரீர், அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்” என்ற ஒப்புயர்வற்ற மணிக்கொடிப்பாடலில் இந்திய நாட்டு இனங்களை யெல்லாம் வந்தே மாதரம் என்றுஎழுதித் திகழும். பட்டொளி வீசிப் பறக்கும் பாரத தேவியின் கொடியைக் காக்க வாரீர் வாரீர் என்று அழைக்கின்றார். செந்தமிழ் நாட்டுப் பொருநர்கள், சேரன் வீரர்கள், துணிந்த தெலுங்கர்கள், தாயடிபணியும் துளுவர்கள், கன்னடர், ஒட்டியர், காலனைக் கலக்கும் மராட்டர், மறத்தையும் கற்பையும் காக்கும் கீர்த்தி மிக்க இராசபுத்திர வீரர்,பாஞ்சாலநாட்டவர்,துஞ்சும்போதும் தாயை வணங்கும் வங்கவீரர் என்ற பல இனத்தாரையும் கொடி காக்க வாரீர் என்று அழைக்கின்றார். இவ் வீரரெல்லாம் நம்புதற்குரிய திருக்கூட்டம் எனவும் எந்நிலையிலும் உயிர் கொடுத்துக் கொடியினைக் காப்பார்கள் எனவும் பாராட்டு கின்றார். எனவே, பாரதிப் பெருமகன் காணும் தேசிய ஒருமைப்பாடு என்பது நாட்டின் பல மாநிலங்களிலும் வாழும் இனமக்கள் எல்லாம் நாட்டிற்காக ஒன்றுபடுதல் என்பதாகும். வரலாற்றுச் சிறப்புடைய வாழும் இனங்களை அவர் வெறுக்கவில்லை;போற்றிப்புகழ்கின்றார்.நீங்கள் பல இனமாக இருந்தாலும் தாயின் மணிக்கொடியாகிய பட்டுத்துகிலைக் காக்க ஒன்று கூடி ஒடி வம்மின் என ஒருமைப்பாட்டால் சேர்க்கின்றார்.