பக்கம்:இலக்கியச் சாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

வ.சுப. மாணிக்கனார்



இவ்வாறு எழுத்தின் குறிக்கோளை மூதறிஞர் இராசாசி வலியுறுத்துவர். மு.வ.வின் அகல்விளக்கு, கல்கியின் அலையோசை, பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர், செயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், இந்திராபார்த்தசாரதியின் குருதிப்புனல், அகிலனின் எங்கே போகிறோம் என்ற புதினங்களும்; அண்ணாவின் நல்லதம்பி, கலைஞரின் தூக்குமேடை, இராமையாவின் பூவிலங்கு, மணிசேகரனின் பிறவிக்கடல், அழகப்பனின் முத்துச்சிற்பி, கோராவின் பெண்சாதி, வீராசாமியின் பொன்குஞ்சு முதலிய நாடகங்களும் குறிக்கோள் இலக்கியங்களாகப் படைக்கப்பட்டுள. சீரழிந்த நிகழ்காலக் குழுவாயத்தைப் புனைதல் நசிவிலக்கியம் எனவும் எதிர்காலத் தீர்க்க தரிசனம் கூறல் நல்லிலக்கியம் எனவும் சீவானந்தனார் வகைப்படுத்துவர்.

ஐயப்படாமை

ஒருவகைக் குடும்பச் சிக்கலைத் தீண்டுவதில் எழுத்தாளர்கள் குண்டு வெடிமேல் நடப்பது போல உயிர் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டும். இல்லறப் பெண்களை ஐயப்படுவது என்பது இலக்கியத்தின் சுவைப் பொருளாக இன்றும் வளர்கின்றது. இதனை மேலும் வளரவிடுவது குழும நலமாகாது.

பெண்ணினம் எல்லாத்துறையிலும் வெளிவந்து பல பணிகளில் ஈடுபடுங் காலம் இது அலுவலகங்களில், கல்வித்துறைகளில், தொழில் நிறுவனங்களில் ஏன், காவல் துறைகளிலுங்கூட நிறைந்த பணிகளை ஆணோடு அடுத்தடுத்து இருந்து பெண்கள் செய்கின்றனர். பணிச் செம்மைக்கும் மகளிரினம் இன்னும் பெருகிய பணிகள் செய்யவேண்டும் என ஒதுக்கீடுகளும் உண்டு. இங்ஙனம் பலகளங்களில் பெண் ஆண் நெருக்கத்தைப் பன்படுத்திக் கொண்டு ஐயப்படுங் கதைகளைத் திரிப்பது இப்போது பெரும் போக்காக வளர்ந்து வருகின்றது. அக்கினிப்பிரவேசங்களைக் காணும் துடிப்பும் வளர்ந்து வருகின்றது. ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் நட்பாக இருப்பது போல ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கக் கூடாதா? பழகமுடியும் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/22&oldid=509742" இலிருந்து மீள்விக்கப்பட்டது