பக்கம்:இலக்கியச் சாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

வ.சுப. மாணிக்கனார்



ஆண்டுகளுக்கு முன் ஒரு நங்கையைக் கண்ட கல்லூரி மாணவன் மீண்டும் அவளை அக்கோயிற் புறத்துக் கண்டு சில இன்பச் சொற்களை உளறினான். அவளும் காண்கின்றாள். இந்நிகழ்ச்சியை அக்காதலன் தன் நண்பனிடம் சொல்லும்போது,"அவளுக்கு மட்டுந்தானா நான் சொன்னது கேட்டது என்பதில்லை. எனக்கு அப்பொழுதே சந்தேகம். உள்ளிருந்த விக்கிரகம், எதிர்த்துணில் ஒன்றி நின்ற யாளி அவையும் கேட்டு நின்றன” என்று அஃறிணைச் சான்றுபடச் சொல்லுகின்றான். காதற் பேச்சுக்கு அஃறிணைக் கரி காட்டும் உத்தி சங்க காலத்திலே உண்டு.

           யாரும் இல்லைத் தானே கள்வன் 
           தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ 
           தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால 
           ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் 
           குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே 

என்ற குறுந்தொகையில் களவுத் தலைவி தலைவனொடு உறவாடியதற்குச் சான்று மனித்தரில் யாருமில்லை யானாலும், ஓடும் நீரில் ஆரல்மீனை எதிர்பார்த்திருக்கும் நாரை அச்சமயம் இருந்தது என்று இயற்கைக்கரி சுட்டுகின்றாள். இதனால் நுண்ணிய உத்திகட்குக் கால வடைப்பான் இல்லை என்ற படைப்பிய வரலாறு பெறப்படும்.எனவே எதிர்காலம் என்பது இலக்கியப் பழத்தொடர்காலமேயன்றி அறுந்து தோன்றும் தனிய காலமன்று.

தமிழ் எழுத்தாளரின் மொழிக் கடமை

    தமிழ் எழுத்தாளர் பரம்பரை, எழுத்தாளர் வாழ்வு வளம், காதல் நடப்பியல், இலக்கியப் பொருட்கள், ஐயப்படாமை, மனமாற்றவுத்தி என்ற சில கருத்துக்களை இதுகாறும் உரை செய்தேன்.என் சிந்தனைக்குள் பல்லாண்டுகளாகக் கவலையாக ஓடிக் கதப்படுத்திக் கொண்டிருக்கும் கசப்பான தூய தமிழ் மொழி நெறியை இப்போது சொல்ல முயல்கின்றேன். கருத்து வேறுபாடுகள் உடைய செய்திதான். ஆனால் மன வேறுபாடு இல்லை; என்றாலும் சொல்ல வேண்டிய மாநாட்டில் கேட்க