பக்கம்:இலக்கியச் சாறு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

வ.சுப. மாணிக்கனார்



கொண்டு நம்மனோர் இலக்கணக் கலையைப் பலவாறு வளர்த்தனர். இலக்கிய வளர்ச்சியோடு இலக்கண வளர்ச்சியும் ஏற்பட்டது. திறனாய்வும் இலக்கியத்தின் வேறானதன்று. இக்கூட்டுறவை நம்மனோர் அறிந்திருந்தும், அதனை ஒரு துறையாகத் தனித்தெடுத்துக் கலையாக வளர்க்கவில்லை; ஆய்வு முறைகளை வகுத்து நூல்களைப் பெருக்கவில்லை. இன்று இலக்கியத் திறனை தனித்துறையாக மேற்கொண்டு வளர்க்க முயன்கின்றோம். இது மேனாட்டுக் கல்வியால் பெற்ற பேறாகும்.முன்னரே இலக்கியச் செல்வங்கள் நிரம்பிய தமிழுக்கு இத்துறை நலம் செய்யும். -

எச்செல்வமாயினும் உடையான் துய்க்கத் தெரிதல் வேண்டுமன்றோ? நல்ல சரக்காயினும் இக்காலத்து விளம்பரம் வேண்டும். திறனுரல்களின் பெருக்கத்தால் தமிழில் உள்ள எல்லா இலக்கியங்களும் வாழ வழியுண்டு; அவற்றைப்பற்றி ஒரளவேனும் மக்கள் அறிய வாய்ப்பு உண்டு; குடியரசு ஒங்கும் இக்காலத்து மக்களை இலக்கியச் செல்வர்களாக உயர்த்தினாற்றான், நூல்களின் விற்பனை பரவி நிலைக்க இடம் உண்டு. நலம்பல பயக்கும் திறனாய்வுத் துறையில் கேடுகளும் இல்லாமலில்லை. இத்துறை குறைவிலா நிறைவு என்று திறனாளிகள் சொல்லார். திறன் வளர்ச்சியால் இலக்கிய மூலப் படைப்புக்கள் குறையலாம்; சொல்வன்மையுடைய திறனாளனது கருத்தையே நூலாசிரியரது கருத்தாகக் கற்பவர் கொண்டு விடலாம்; திறநூலில் சில பகுதிகளை அறிந்த துணையானே மூலநூலில் கைவரப் பெற்றது போன்ற புல்லறிவை வளர்க்கலாம்; மூலநூலைப்படிக்கவேண்டா என்ற போக்கையும் ஊட்டலாம். இன்னணம் திறனாய்வுத் துறையின் குறைகளை அடுக்கிச் சொல்ல முடியும். யார் உலகத்து ஓர் சொல்லில்லார்’ என்றபடி, எத்துறையும் எண்ணுங் காலைக் குறைபாடுடையதே. குறைபாடு துறைக்கு இயற்கையன்று; துறையாளர்களின் அறிவையும் பண்பையும் நோக்கத்தையும் சார்ந்தது. இப்புதுத் திறனாய்வைத் தனித்திறன் என்று அழைப்போம். இலக்கியம் செறிந்தும், ஒளி குன்றியிருக்கும் தமிழுக்கு இத்தனித் திறன் வேண்டும். உரைநடை பெருகிவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/34&oldid=551032" இலிருந்து மீள்விக்கப்பட்டது