பக்கம்:இலக்கியச் சாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

33



இக்காலத்து இத்திறனாய்வை எளிதாக மேற்கொள்ள முடியும். எனினும் திறனாய்வுத் துறையின் ஒரு வகையாகவே இத்தனித் திறனை நாம் கருதவேண்டும். இதுவே முழுத்துறையாகாது. அரங்கேற்றங்கள்

தொன்றுதொட்டுத் தமிழகத்து இரண்டு வகையான இலக்கியத் திறன்கள் வளர்ந்து வந்துள்ளன. ஒருவன் பல எண்ணங்களை எண்ணலாம். அஃது அவன் நெஞ்சுரிமை; அவ்வெண்ணங்களுக்கு இலக்கியமாக ஏன் வடிவு கொடுக்கிறான்? அவை மன்னுலகில் பரவ வேண்டும் என்பது அவன் நோக்கம். ஒருவன் கருத்துடைமையை மன்னாய உடைமையாக மாற்றும் பதிவேடே - வனப்பேடே இலக்கியம் என்பது. பைஞ்ஞீலம் மிகப்பெரியது; பரந்தது; சிக்கலானது. அது தன் இலக்கியத்தை ஏற்கும் என்ற நன்னம்பிக்கை எழுத்தாளனுக்குப் பிறப்பது எப்படி? இவன் இலக்கியம் கற்கத் தகுவது என்ற பெருநம்பிக்கை மன்னாயத்தார்க்கு உண்டாவதுதான் எங்ஙனம்? இவ்விரு பகுதியார்க்கும் நம்பிக்கையூட்டும் நடுவமைப்பே அரங்கேற்றம் என்பது. புலவனின் தனித்தன்மைகுறையாதும், மன்னாயத்தின் பொதுத் தன்மை கெடாதும் பார்த்துக் கொள்கை இவ்வரங்கின் கடமையாகும். முத்தமிழுக்கும் அரங்கேற்றம் பண்டு இருந்தது. இன்று திரைப்படத் தணிக்கைக் குழுவை இதற்கு ஒருவாறு ஒப்பிடலாம்.

தொல்காப்பியம்

நூல் அரங்கேற்றம் பற்றிய பல குறிப்புக்கள் நமக்குக் கிடைத்துள்ளன. தொல்காப்பியம் நிலந்தரு

திருவிற்பாண்டியன் அவையத்து அரங்கேறிற்று. நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் அரங்கின் தலைவராவார். தொல்காப்பியத்திற்குக் குற்றங்கூறி அரங்கேறாதபடி செய்க என்று அகத்தியனார் அதங்கோட்டாசானுக்குச் சொன்னார் என்றும், அதன்படி இவ்வாசான் பல வினாக்களைக்கேட்டார் என்றும் ஒரு கதையுண்டு. அரங்கேறாதாயின் நூல் பரவாது “露紫 இதன் உட்கிடை தன் நூல் எழுத்து முறைகளை

. 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/35&oldid=551033" இலிருந்து மீள்விக்கப்பட்டது