பக்கம்:இலக்கியச் சாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

35



பொதுவாக அமைந்திருத்தலையும் நோக்குக. சைவர்களும் சமணர்களும் பாராட்டுத் தெரிவித்த பின், நாதமுனி தலைமையில் திருவரங்கத்தில் அரங்கேற்றம் நிகழ்ந்தது. 'கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கேற்றினானே' என்று ஒரு தனியன் கூறுகின்றது. கம்பர் தம்மைப் புரந்த சடையப்பர்மேல் நூற்றுக்கு ஒன்று விழுக்காடாகப் பதினாயிரம் பாடல் கொண்ட தம் காப்பியத்து நூறுபாடல் பாடியிருந்தார். தெய்வ மணங்கமழும் நூலகத்து அடிக்கடி மனிதப் பாடல் இருப்பது சரியில்லை என்றும், ஆயிரத்துக்கு ஒரு பாடலாகப் பத்துப் பாடல் சடையப்பருக்கு இருந்தாற் போதுமென்றும் நாதமுனி கருத்துரைத்தார். நூற்றுக்கு ஒருவராகச் சடையப்பரை மதித்தேன்; தாங்கள் சொல்வதுபோல அப்பெரு மகன் ஆயிரத்துக்கு ஒருவராக மதிக்கத்தக்கவர் என்று கம்பர் ஒட்பமாக மறுமொழி கூறினார். பாடியிருந்த தொண்ணுாறு பாடல்களையும் அகற்றினார். கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டம் கம்பருக்கு வழங்கப் பட்டது. அதிவீரராம பாண்டியர் எழுதிய நைடதம் காமச்சுவை நிரம்பியது. மகனது தமிழறிவு இத்துறையில் கழிகின்றதே என அவர் தாய் அவலங்கொண்டாள். அதனால் நூலின் பிற்பகுதியை ஆர்வமின்றி அதிவீரராமர் எழுதி முடித்தார். இந்நூல் கரும்பு போன்றது என்றும் வேட்டைநாய் போன்றது என்றும் அவையோர் கறை கூறினர். நைடத நூலில் அவையடக்கம் என்பது இல்லை. தாம் வேந்தனாகலின் அவையடக்கம் கூற வேண்டியதில்லை என்று அரங்கின்முன் காரணங்கள் கூறினார் என்ப. காஞ்சிப் புராணம்

'கொங்கேந்து மணிமன்றுள் குனித்தருளும் பெருவாழ்வைக் குறித்து வாழ்வோம்’ என முதற்கண் தில்லைச் சிற்றம்பல முடையார் வணக்கம் காஞ்சிப் புராணத்துக் கூறப்பட்டுள்ளது. காஞ்சித்தலத்து ஏகாம்பரநாதர் வணக்கத்தை இரண்டாவதாகக் கூறினார் சிவஞான முனிவர். தலக்கடவுளின் வணக்கமே முதலில் இருத்தல் வேண்டுமென அரங்கிற் சிலர் வாதாடினர். உடனே முனிவர் காஞ்சித் தல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/37&oldid=551035" இலிருந்து மீள்விக்கப்பட்டது