பக்கம்:இலக்கியச் சாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

வ.சுப. மாணிக்கனார்



ஒதுவாரை அழைத்துக் காஞ்சித் தேவாரங்களை ஒதும்படி மொழிந்தனர். ஒதுவார் முதற்கண் திருச்சிற்றம்பலம் எனத் தொடங்கினார். இதனால் எத்தலத்தைப் பாடினும் முதலில் திருச்சிற்றம்பலத்தைச் சொல்லும் சைவமரபினை அரங்கினர்க்கு நினைவூட்டித் தாம் பாடிய முறை தகும் என்று அறிவுறுத்தினார் முனிவர். அவரை ஆதரித்தவர் பிள்ளையார் பாளையம் மணியப்ப முதலியார். அவர் மேல் செய்ந் நன்றிப் பாடல் ஒன்று காஞ்சிப் புராணத்துப் பாடி வைத்திருந்தார் முனிவர். தம் பெயர் சுட்டவேண்டா என்று மணியப்பர் வேண்டியபடி முதலில் எழுதியிருந்த செய்யுளைப் பின்வருமாறு மாற்றி அமைத்தார். -

பொருவில் கச்சியம் புராணம் வண்டமிழினிற் புகலென்று இருநி லம்புகழ் மணிமதிற் கச்சியே கம்பர் திருவ ருட்குரி யான்தவா கூறிய சிறப்பால் உரிமை யுற்றெழும் ஆசையான் உரைத்திட லுற்றேன் மணி என்று முதலியாரின் பெயர் மறைமுகமாக இச்செய்யுளில் அமைந்திருத்தலைக் காணலாம். மகாவித்துவான் இராகவையங்கார் பாடிய பாரிகாதையும், மூதறிஞர் சோமசுந்தர பாரதியார் பாடிய மங்கலக் குறிச்சிப் பொங்கல் வாழ்த்தும் அண்ணாமலை நகரில் சில ஆண்டுகளுக்கு முன், புலவர்கள் முன்னிலையில் அரங்கேறின. நூற்செம்மைகள்

அரங்கேற்றுகையில் அவையோர் எழுப்பும் தடைகளுக்கு ஒப்பும் விடை ஆசிரியன் சொல்வான் அல்லது தடைகளுக்குச் செவிசாய்த்து நூலகத்துத் திருத்தஞ் செய்து கொள்வான். சில சொற்களேனும் சில தொடர்களேனும் அவையோரால் செம்மைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. கம்பர் தொண்ணுாறு பாடல்களை ஒதுக்கினார் என்று பார்த்தோம், நூல் வெளிவந்து பலர்படி எடுப்பதற்குமுன் அரங்கேற்றத் திறனாய்வு எழுதலின், இவ்வகையை 'அகத்திறன்' என்று அழைக்கலாம். பலர்க்குமுன் நேரிருந்து அரங்கேற்றுதல் என்னும் முறை இருக்குமாயின் புலவன் தானே தன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/38&oldid=551036" இலிருந்து மீள்விக்கப்பட்டது