பக்கம்:இலக்கியச் சாறு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

வ.சுப. மாணிக்கனார்



ஆசிரியன் காலத்திற்கேற்ப எளிய முறையில் அமைத்துக் கொள்வானாக. இன்று கவியரங்கங்கள் ஒரளவு இம்முறை தழுவியன என்று கூறலாம். செய்யுள் நூல்கள்தாம் அரங்கேற்றத்திற்கு உரியன என்று எண்ணற்க. இக்காலம். உரை நடைக்காலம். சிறந்த உரைநடை நூல்களும் உரைநடையரங்கேற்றம் பெற்றுப் பின் வெளிவரல் வேண்டும். ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆய்வரங்குகளில் உறழப் பெற்று வெளிவரு முறையை நாம் அறிவோம். அகத்திறன் அல்லது அரங்கேற்றம் என்ற தொன்முறை மீண்டும் இயன்ற அளவு உயிர்ப்பிக்கப் படுமாயின், முதலாவது இன்று பெருகி வரும்

மொழிக்குறைபாட்டிற்கு இடமில்லை; புதிய பொருளாக்கத்திற்கும் வழிபிறக்கும். புறத்திறன்

தமிழ் மொழிக்கண் முன்னரே வளர்ந்துள்ள மற்றொரு இலக்கியத் திறனைப் ‘புறத்திறன்’ என்று பெயரிடலாம். அரங்கேறி அகத்திறன் பெற்று மன்னாயம் ஒப்பிய நூல்களைப் பின்னர்க் குறைகூறுதல் என்பது மரபன்று. அந்நூல்களின் சிறப்புக்களை எடுத்துக்காட்டுவதே அடுத்துச் செய்யக் கூடியது. இச் செய்கையைத்தான் உரையாசியர்கள் திறம்பட ஆற்றினர். நூல் குற்றம் உடையது போலத் தோன்றினும், உரையாசிரியர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்; எவ்வாற்றானும் அமைதி கூறவே முயல்வர். இஃது அரங்கேற்றத்துக்குக் கொடுத்த நன்மதிப்பாகும். எல் என்பது இலங்குதல் என்ற பொருளுடைய உரிச் சொல்லாயினும், ஆசிரியர் இடைச் சொல்லாகக் கருதி இடையியலில் ஒதினமையின், இடைச்சொல் என்றே கொள்வோம் என்பர் சேனாவரைய்ர். மலைபடுகடாம் என்னும் நூல் நன்னன் மேல் பாடப்பட்டது.

தியி னன்ன ஒண்செங் காந்தள்

என்பது இந்நூலில் வரும் ஒரடி. நன்னன் என்னும் பெயர் தீயோடுசேர்ந்து வருதலின் ஆனந்தக்குற்றம் என்றும் அதனால் பாடினாரும் பாட்டுண்டாரும் இறந்தார் என்றும் ஆளவந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/40&oldid=551038" இலிருந்து மீள்விக்கப்பட்டது