பக்கம்:இலக்கியச் சாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

39



பிள்ளை மலைபடு கடாத்துக்குக் குற்றம் கூறினராம். இக்கருத்தை நச்சினார்க்கினியர் பல வகையால் மறுப்பர். 'பின்னுள்ளோர் ஆனந்தக் குற்றம் என்பது ஒரு குற்றம் என்று நூல் செய்ததன்றி, அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இக்குற்றம் கூறாமையின் சான்றோர் செய்யுட்கு இக்குற்றமுண்டாயினும் கொள்ளார்’ என்று நச்சினார்க்கினியர் அறுதியிட்டுரைத்துமூலநூலைப்போற்றுந் திறத்தை ஒர்க. நூலாசிரியர்களை நன்கு மதித்துப் பற்றொடு உரையெழுதும் பாங்கினைப் புறத்திறன்களில் காண்கிறோம். ‘தெய்வப் புலமைத் திருவள்ளுவர்” என்றும், எல்லா நூல்களினும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கு இயல்பு’ என்றும் பரிமேலழகர்தம் ஆசிரியப் பற்றினைப் புலப்படுத்தியுள்ளார். இக்காப்பியஞ் செய்தவர் விழைவு வெறுப்பற்ற சேரமுனி என்று உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இளங்கோவைப் புகழ்வர். இவ்வாறு அன்போடு ஆய்வு செய்வது திறனிலக்கணங்களுள் ஒன்றாகும்.

உரையாசிரியர்கள் தம் புறத்திறனில் நூலின் அமைப்பு, சொல்லாழம், கருத்தாழம் ஆகியவற்றை இடந்தோறும் எடுத்துக்காட்டிச் செல்வர்; மூலத்தோடு இயைத்தியைத்துச் சிறிது சிறிதாக இலக்கிய வன்மைகளைப் புலப்படுத்துவர். அவர்கள் ஆங்காங்குச்சொல்லிய நூற்கூறுகளைத்தொகுத்துப் பார்ப்பின், பல வகையான திறனிலக்கணங்களை நாம் கற்க முடியும். சீவகசிந்தாமணியும் சிலப்பதிகாரமும் தொடர்நிலைக் காப்பியங்களாதலின், இவற்றின் உரைகள் சிறந்த புறத்திறன்களாகும். பதினாறு வயதுடைய கோவலனது பிறப்பை முற்கூறாது, பன்னிர்ண்டு வயதுடைய கண்ணகியின் பிறப்பை முற்கூறியதற்குக் காரணம் கண்ணகியே கதைக்கு நாயகியாவாள் என்று அரும்பத உரையாசிரியரும், பத்தினியை ஏத்துதல் இக்காப்பியத்தின் உட்கோள் என்று அடியார்க்கு நல்லாரும் அமைப்பை ஆராய்வர். கவுந்தியடிகளுக்குத் தவப்பயனாலே சபிக்கும் ஆற்றல் உண்டேயன்றி, எதிர்கால வுணர்ச்சியில்லை என்று அடியார்க்கு நல்லார் பாத்திரப் பண்பைக் காட்டுவர். இவ்வகைப் புறத்திறன்கள் மூலத்தோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/41&oldid=551039" இலிருந்து மீள்விக்கப்பட்டது