பக்கம்:இலக்கியச் சாறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

வ.சுப. மாணிக்கனார்



ஒட்டி எழுதப்படுபவை; எல்லா மூலப்பகுதிகளையும் இடந்தோறும் அலசிக் காட்டுபவை; நூலைமுறையாகக் கற்பவர்க்குச் சொல்லும் பொருளும் தந்து உதவுபவை.

அகத்திறன், புறத்திறன், தனித்திறன் என்ற மூவகைத் திறன்களையும் ஒப்ப மதித்துப் போற்றித் தமிழ் இலக்கிய வளர்ச்சி செய்யவேண்டும். ஒவ்வொரு திறனும் ஒவ்வொரு வகைப் பயனுடையது. அகத்திறனால் நூலுக்குச் செம்மையும், புறத்திறனால் நூலின் நுண்மையும், தனித்திறனால் நூலின் முழுவனப்பும் நூலாசிரியரின் ஆற்றலும் தோன்றுகின்றன. மன்னாயத்துக்குப் பெருநன்மை செப்பமுடைய நூல்கள் தோன்றுவது. எங்ஙனமும் நூல்கள் பெருகட்டும் என்ற விட்டுவிட்டுப் பின்னர் புறத்திறனும் தனித்திறனும் செய்வது கேட்டினை மன்பதையிற் பரப்புவதாகவே முடியும். ஆதலின் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றபடி, அகமாசற்ற செவ்விய நூல்களே சிலவாயினும், தமிழுக்குச் சிறந்த செல்வங்களாகும்:மன்னாயத்திற்குத்துயவழிகாட்டிகளாகும். அறத்தின் வழி பொருளும் இன்பமும் நடக்கவேண்டும் என்பர்; அதுபோல்,அகத்திறன் வழி பிற இருதிறன்களும் நடப்பதாகுக. நடப்பின், நாடும் மொழியும் நீடுவாழும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/42&oldid=551040" இலிருந்து மீள்விக்கப்பட்டது