பக்கம்:இலக்கியச் சாறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இலக்கிய வெள்ளம்

தமிழ் நிலைபெற்ற தாங்கரும் மரபுடைய மதுரை மூதூரின்கண் தமிழ் வாழவும் தமிழால் நாம் வாழவும் இன்று தலைக்கூடியிருக்கின்றோம். சங்க நாளில் சேர பாண்டிய சோழ நாட்டுப் புலவர்கள் கூடும் தமிழ்கெழு கூடலாக இம்மதுரை விளங்கியது. பனம்பாரனார் வரையறுத்தபடி, வடவேங்கடம் தென்குமரி இடைப்பட்ட தமிழ்ப் புலமையோரே பண்டு கூடி இந்நகர்க்கண் தீந்தமிழ் ஆய்ந்தனர். ‘வடக்கில் இமயமலை தெற்கில் வாழும் குமரி முனை’ என்று பாரதி மொழிந் தாங்கு, இமய முதல் குமரி வரை தமிழ் வளர்க்கும் புலவர்கள் கூடும் இந்தியத் தமிழ்க் கூடலாக இம்மதுரையை உயர்த்தி யிருக்கின்றோம். மக்கள் பதவி உயர்வு பெறுவதுபோல, மதுரை நகரமும் புகழால் பரந்தோங்கு சிறப்புடையதாகத் திகழ்கின்றது.

மேலைநாட்டுச் சில மொழிகளின் பெருவளர்ச்சியோடு - ஒப்பிடுகையில் இன்று நம் தமிழ் வளர்ச்சி ஒரிரு நூற்றாண்டு பிற்பட்டுக்கிடக்கின்றது.தமிழ் அரசாட்சிநடத்தினால் மட்டும் போதாது, அறிவாட்சியும் நடத்த வேண்டும்; கால மொழியாகவும் வேண்டும்; பல்கலைக் கழகங்களிலும் அனைவகைக் கல்லூரிகளிலும் அனைநிலைத்துறைகளிலும் சரி நிலை என்னும் உரிநிலையும் பெறவேண்டும்.

எல்லாந் திருச்செவியில் ஏறும் படியுரைக்க வல்லாயுன் போலெவர்க்கு வாய்க்குமே

என்று தமிழ்விடுதுது பாராட்டியபடி, எக்கலையையும் ஏறும்படியுரைக்க வல்ல மொழி தமிழ் மொழி என்பதனை இடைக்கால இலக்கியங்கள் மெய்ப்பித்துவிட்டன. பல துறைகளையும் பாட்டால் இயம்பும் வன்மை ஒரு மொழிக்கு

அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் - முதலாவது கருத்தரங்கு - மதுரை.1968,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/43&oldid=551041" இலிருந்து மீள்விக்கப்பட்டது