பக்கம்:இலக்கியச் சாறு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

45



இடைக்கால முற்காலத்தார். தொகையாக்கிய சான்றோர்கள் தற்கால உ.வே.சா.போன்றவர்கள். ஆதலின் இடைக்காலம் என்பது சங்கக் காப்புக் காலம் என்று முதலாவது தெளிய வேண்டும். சங்கப்பாடநூல்கள்

சங்கத்தொகைகளை இடைக்காலத்தார் காத்தளித்ததோடு நிற்கவில்லை. அவைகளைப் புரிந்து படிப்பதற்கு ஏற்ற வகையில் அகப்பாட நூல் புறப்பட நூல்களை யாத்துக் குவித்தனர். கோவை நூல்கள் அகப்பட நூல்களாகும். புறப்பொருள் வெண்பாமாலையின் வெண்பாக்களும் முத்தொள்ளாயிரமும் பரணியும் புறப்பாட நூல்களாகும். இனைய நூல்களில் சங்கக் கருத்துக்கள் மறுவாழ்வு பெற்றன. மள்ளர் குழிஇய விழவினானும் மகளிர் தழிஇய துணங்கையானும் யாண்டுங் காணேன் மாண்டக்கோனை' என்ற ஆதிமந்தியின் குறுந்தொகைப் பாடல் (31) நம்மாழ்வாரைக் கவர்ந்தது.

தையனல் லார்கள் குழாங்கள்

குழிய குழிவினுள்ளும் ஐயநல் லார்கள் குழிய

விழவினும் அங்கங்கெல்லாம் கையபொன் னாழிவெண் சங்கொடுங்

காண்பா னவாவுவனான் மைய வண்ணா மணியே முத்தமே

யென்தன் மாணிக்கமே என்று குறுந்தொகை திருவித்தமாக உருவெடுத்தது.

தாயிற் சிறந்ததன்று நாண்தைய

லாருக்கந் நாண்தகைசால் வேயிற் சிறந்தமென் தோளிதிண்

கற்பின் விழுமியது என்ற திருக்கோவை (204) தொல்காப்பியத்தின் ஈகையன்றோ? இங்ஙனம் ஆயிரமாயிரம் சங்கக் கருத்துக்கள் வெவ்வேறு யாப்பு வகையில் இடைப்பிறவி எடுத்துள்ளன. ஆதலின் இடைக்கால இலக்கியங்கள் சங்கவழி நூல்களே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/47&oldid=551045" இலிருந்து மீள்விக்கப்பட்டது