பக்கம்:இலக்கியச் சாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

49



பாடுதற்கு இயற்பாக்களோடு இசை நாடகப்பாடல்களும் இயற்றத் தெரியவேண்டும்.பரணி பாடுதற்கு நடைவேறுபட்ட தாழிசை இனங்கள் வேண்டும்.பிள்ளைத் தமிழ் பாடுதற்குப்பல சீர்கொண்ட நீண்ட விருத்தப் பயிற்சி வேண்டும். பிள்ளைத் தமிழ் என்று பெயர் பெற்றிருந்தாலும் இதன் நடை பல பருவங்களில் பெருநடையாகும். -

யாப்பு வன்மையின் வெறிநிலை சிலேடைப் பாடல் என்க. செம்மொழிச் சிலேடையே அருஞ் செயல். பிரி மொழிச் சிலேடை தமிழ்ப் புலவர்க்கு அரியவென்று ஆகாதவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு, புணர்ச்சியிலக்கணத்தை நம்பியே சிலேடை யாப்பு வளர்ந்தது. இவை பொருளற்றன என்று தள்ளிவிடுதலும் எளிது; பிரித்துப் பதிப்பிக்க இடங்கொடா என்று தூற்றலும் எளிது.பிறமொழிக்கலப்பால்சிலேடைநூல் பெருகிற்று என்ற ஒரு குறையுண்டு என்றாலும், சின்னாளில் எவ்வளவு மொழிப் பயிற்சியைத் தரவல்லதுஎன்று அறிந்தோர் சிலேடைவெண்பா ஒரு நூலாவது கற்பதையும் கற்பிப்பதையும் உடன்படுவர்.

மற்றிலை யாவி தளரும்

பொழுதுமுன் வந்துநிற்பார் நற்றிலை யாடக மன்றுடை

யாரன்றி நாமவரைப் புற்றிலை பாபுக லூரிலை

யாவெனப் போற்றியின்றே சற்றிலை யாயினுந் தூவுநெஞ் -

சேபினைச் சாவிலையே (திருப்புகலூரந்தாதி. 83) மனனம் பண்ணுதற்கும் சொற்பயிற்சிக்கும் மொழிப் புணர்ச்சிக்கும் பிரிவிற்கும் சிலடைபோல் ஆற்றலுடையது வேறில்லை. நூலெல்லாம் ஒரே பயனுடையன அல்ல. ஒரு நூலின் பயன் இன்னொரு நூலிலிருந்து கிடைக்காது. சில நூல்கள் பெரும் பயனளிப்பன என்றாலும் சில்லறை வணிகம் தொகை வணிகம்போல எல்லா நூலும் கல்விக் குலத்தார்க்கு ஒஹ்வோர் பருவத்தில் இன்றியமையாதவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/51&oldid=551049" இலிருந்து மீள்விக்கப்பட்டது