பக்கம்:இலக்கியச் சாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

51



முற்சோழ வரலாறும் முதற் குலோத்துங்கசோழன் வரலாறும் அறிய உதவும் இவ்வுலகப் பரணியாகும்.

இராசபரம்பரியம் என்ற உறுப்பு:வரலாறு சொல்லுதற்கே எழுந்தது. தக்யாகப் பரணி, அஞ்ளுவதப் பரணி, மோகவதைப் பரணியெல்லாம் புராணமாகவும் உருவகமாகவும் மாறி அவ்வுலகப் பரணியாகிவிட்டன. இவையெல்லாம் பரணியாகுமேல், கரன்வதைப்படலம் கும்பகருணன் வதைப்படலமெல்லாம் காப்பியப் பரணிகள் ஆகாவா?

பாண்டிக்கோவை, தஞ்சைவாணன் கோவை, குலோத்துங்க சோழன் கோவைகளில் மக்கிள் பாட்டுத் தலைமை வகிக்கின்றனர். பாண்டிக்கோவை பல்லவ பாண்டிய வரலாற்றுக் கருவூலமாக விளங்குகின்றது. திருக்கோவை, திருவாரூர்க் கோவை,திருவெங்கைக் கோவை முதலியன. கடவுளர்களைப் பாட்டுடைத் தலைவர்களாக்கி உலகம் தழுவாவாயின. நந்திக்கலம்பகம், மூவருலா இவை வரலாற்றிலக்கியங்கள். மதுரைக்கலம்பகம்,அழகர் கலம்பகம், திருவாரூர் உலா, திருப்பூவண நாதருலா எல்லாம் தெய்வத் தலைமை பெற்ற இலக்கியங்கள்; நீலந்தீண்டா இலக்கியப் பறவைகள். கிளவித் தலைவர்கள் பெயர்சுட்டப்படார். பாட்டுடைத் தலைவர்களையும் அன்ன நிலையினரிக்கி விட்டால், அவ்விலக்கியங்கட்கு இவ்வுலக வாழ்வுண்டா? பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றால், மக்கட் பொருளில்லா இலக்கியங்கட்கு இவ்வுலக வேர் உண்டா? எடுத்துக் காட்டியவற்றிலிருந்து,இடைக்கால இலக்கிய வகைகள் பிழைபட்டனவல்ல எனவும்,இவ்வுலகியலுக்கு உரிய இடங்களிலும் அவ்வுலகம் புகுந்து கொண்டதனால், இலக்கியப்பாழ் ஏற்பட்டதெனவும் தெரியலாம். பொடிமட்டையிலும் பொன்துகள் வைப்பாருண்டோ? இடைக்கால நல்லஇலக்கிய அமைப்பைச் சமய வல்லவர்கள் முழுதும் பற்றி அவமாக்கிவிட்டனர். மீண்டும் மக்கள் மேலாக இவற்றைப் பாடி உயிர்ப்பித்தல் தமிழிலக்கிய வளர்ச்சிக்கும் பாவளர்ச்சிக்கும் நல்லது. இவற்றைப் புலவர்கள் பெரியார் பிள்ளைத் தமிழ், காந்தி பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/53&oldid=551051" இலிருந்து மீள்விக்கப்பட்டது