பக்கம்:இலக்கியச் சாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

53



வெயிலில் நின்றறியின் என்றாங்கு பிறமொழித் தாக்கம் தமிழருமையை உணர்த்திற்று. ‘இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும் எனவும் தமிழ் தழிஇய சாயலவர் எனவும் ‘என்று முள தென்றமிழ் இயம்பி’ எனவும் தமிழுணர்ச்சியை ஊட்டிக்கொண்டே இருந்தனர். அவ்வூட்டத்தாலன்றோ எவ்வளவு அரசு, நாகரிகம்,மொழி, சாதிப்பூசல்களுக் கிடையேயும் தமிழ் நமக்குக் கிடைத்து, நாமெல்லாம் இன்றும் தமிழர்களாக இருக்கின்றோம். மக்கட் குலத்தார் குறைபாடுடையராக: இருக்கும்வரை இலக்கியப் படைப்புக்களும்குறைசார்ந்தனவாக இருக்கும் என்றாலும் இலக்கியத்தின் நோக்கம் முழுதும்மக்கள் வழி இயங்குவதன்று: மக்கள் வழியோடுசென்று மக்களைத் தன் வழியில் இழுப்பது; நிறைவான நிலையைக் காட்டிக் கொண்டிருப்பது. ஒலித்துாய்மை -

இடைக்கால இலக்கியத்தமிழ், எதிர்காலத் தமிழுக்கு வழிகாட்டி நல் வழிகாட்டி என்றேன். என்றதற்கு ஒரு பெருங் காரணம்.தமிழ் ம்ொழிக்க்ாப்பு மட்டுமன்று, தமிழ் ஒலிக்காப்பு. இலக்கியத்துறையிலும் ஏராளமாகச் சமயத்துறையிலும் பிறமொழிச்சொற்கள் கலந்தபோதும், பிறவொலிக் கலப்புக்கு இடந்தரவில்லை. ஏன்? மொழியின் உயிர்நாடி சொல்லில்லை, ஒலிதான் என்பதனைத் திடமாக அறிந்திருந்தனர். பிறமொழி கலந்த தொடக்க காலமாதலின்தொல்காப்பியர் அதுபற்றி இரு நூற்பாக்களே யாத்தனர். இடைக்காலத்துப் பிறமொழிக் கலப்பு மிகுந்தபோது, பவணந்தியார் பிற வொலியாக்கம் பற்றியும் ஒலித்தொடர் பற்றியும்வரம்பான நூற்பாக்கள் பல எழுதினார். தொல்காப்பியர் சொல்லதிகாரத்திற் கூறியது போலன்றிப் பவணந்தியார் எழுத்ததிகாரத்தில் இவை பற்றிய நூற்பாக்களை எழுதிச் சேர்த்தார் என்றால்,எல்லாப் பிறவொலிகளையும் தமிழ்மையாக்குவதில் அவருக்கு இருந்த விழிப்புப் பெறப்படும். பன்மொழிச் சிலேடைக்கும் யமகம் திரிபு மடக்குக்கும் பிறமொழிக் கிளவிகளைக் கூடை கூடையாக அள்ளிக்கொண்ட போதும் ஒலிக்கற்பில் பிறழவில்லை நல்லிடைக் காலத்தார். இந்நிலையை நாம் உணர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/55&oldid=551053" இலிருந்து மீள்விக்கப்பட்டது