பக்கம்:இலக்கியச் சாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

வ.சுப. மாணிக்கனார்



வேண்டும். யாகாவாராயினும் நாகாக்க என்பது போல, யாகலந்தாலும் ஒலிகலவாது தமிழ் காக்கஒலிக்கலப்பு என்பது தமிழ்க் கலைப்பாகும். ஒலிப்பிறழ்ச்சி என்பது தமிழ் உயிர்ப்பிறழ்ச்சி ஆகும்.ஆயிரம் ஆயிரம் செய்யுட்கள் கொண்ட தமிழ்க் காப்பியங்களையும் நடுவிலக்கியங்களையும் சிற்றிலக்கியங்களையும் தெய்வப் பாடல்களையும் சமய, நூல்களையும் அடிக்கடி நினைத்துக் கொள்வோமானால், ஒலித்துய்மை பற்றிய நெஞ்சுரம் நமக்கு ஏற்படும். இவ்வோர் உண்மையையாவதுஇடைக் கால இலக்கியத்திலிருந்து நாம் கற்றுக் கொள்வோமாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/56&oldid=551054" இலிருந்து மீள்விக்கப்பட்டது