பக்கம்:இலக்கியச் சாறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

57



பாட்டுக்கிடையில் வை” என்று ஒரு கேள்வி விடுத்தார். கேள்விக்குச் சிவப்பிரகாசர் உடனே இயற்றிய பாட்டானது,

குடக்கோடு வானெயிறு கொண்டார்க்குக் கேழல் முடக்கோடு முன்னம் அணிவார்க்கு - வடக்கோடு தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல். ஊருடையான் என்னும் உலகு. என்பதாம். குடக்கு எனத் தொடங்கி உலகு என முடிதலால் முடிதலும் இறுதியும் ‘கு’க்கள் வருதல் காண்க. ஊருடையான் என்று ஆசான் கொடுத்த ஒரு தொடரை ஊர் உடைஆன் எனப் பிரிவு செய்துகொண்டு சிவனுக்கு ஊராவது தில்லை, உடையாவது புலித்தோல், ஏறும் ஊர்தியாவதுகாளை என்று பொருளமைத்து இளமையிலேயேதம் மதி நுட்பத்தை வெளிப்படுத்தினார் சிவப்பிரகாசர், யாப்புவிளையாட்டு

காய் என்று எடுத்து இலை என முடித்தல், கொட்டைப் பாக்கு என்று எடுத்துக் களிப்பாக்கு என முடித்தல், கரி என்று எடுத்து உமி என முடித்தல், ஐந்து 'டு’க்கள் வரத் தொடுத்தல் என்றவாறு புலவர்கள் பாடல்கட்டி விளையாடுகிறார்கள். இன்னவிளையாட்டில் ஒட்டக்கூத்தர்கூட ஒரு சமயம் தோற்றுப்போனார்."மதி அல்லது பிறை என்றசொல் ஒரடிக்குள் மூன்றிடத்து வரப் பாடுக என்று ஒளவை கொடுத்த வினாவுக்கு, 'பிள்ளை மதிகண்டு எம்பேதை பெரிய மதியும் இழந்தாளே” எனப்பிள்ளைமதி பெரியமதி என்று இரண்டு மதிகள் வரவே ஒட்டக்கூத்தரால் பாடமுடிந்தது. “ஒட்டா ஒரு மதி கெட்டாய்” என்று ஒளவை இகழ்ந்து, புகழேந்திப் புலவரை நோக்கினாள். வெங்கட்பிறைக்கும் கரும்பிற்ைக்கும் மெலிந்தப் பிறைக்கும் விழிவேலே எனப் பிறைச் சொல் மூன்று ஒரடிக்குள் வருமாறு பாடிப்புகழேந்தியார் வெற்றி பெற்றார் என அறிகிறோம்.

அஞ்சற்றலைகள் தொகுப்பது, நிழற்படம் எடுப்பது, ஒவியம் வரைவது இன்று பலர்க்குப் பொழுது போக்காக இருத்தல் போல, செய்யுள் இயற்றல் என்பது பண்டப் புலவர்க்கு ஒரு பொழுது போக்காகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/59&oldid=551057" இலிருந்து மீள்விக்கப்பட்டது