பக்கம்:இலக்கியச் சாறு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

59



நினைந்தான். ஒட்டக்கூத்தர்பால் தான் கொண்டுள்ள நன்மதிப்பையும் பெரும் பணிவையும் காட்ட இதுவே காலம் என்று துணிந்தான். தான் அரசன் என்பதைச் சிறிதும் எண்ணாது புலவருள் தலையாய ஒட்டக்கூத்தரின் அடியவன், மாணாக்கன் என்று சொல்லிக் கொள்ளத் துடித்தான் குலோத்துங்கன். புலவர் மேலிரண்டடிகளை முடிப்பதற்கு முந்தி,

பாடும் புலவர் புகழொட்டக் கூத்தர் பதாம்புயத்தைச் சூடுங் குலோத்துங்க சோழனென் றேஎன்னைச் சொல்லுவரே

என்று செய்யுளை முடித்துவிட்டான். இதனால்இடைக் காலத்துத் தமிழ்ப் புலவன் பெற்றிருந்த அரசியற் செல்வாக்கு ஒருபுறம் விளங்க, இடைக் காலத் தமிழ் வேந்தன் பெற்றிருந்த தமிழ் வன்மையும் விளங்கக் காண்கின்றோம். சொற்சிலம்பம்

தனிப்பாடற் புலவர்கள், நமக்கு உரைநடை போல எண்ணிப்பாராதே செய்யுள் செய்வதை ஒருபொழுது போக்காகக் கொண்டனர் என்று கண்டோம். வைக்கோலுக்கும் யானைக்கும் பொருத்தம், மீனுக்கும் பேனுக்கும் பொருத்தம், திருமாலுக்கும் கடிகாரத்துக்கும் பொருத்தம் என்ற முறையில் பொருத்தப் பாடல்கள் செய்வதையும் ஒர் இன்தொழிலாகக் கருதினார்கள்.

சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை ஐங்கரர்க்கு மாறுதலைய யானதே!

என்ற வகையில் புணர்ச்சி விதியுள் புகுந்து ஒசைநயம் காட்டுவதையும் ஒருவிளையாட்டுவினையாகப் பயின்றார்கள். வழக்கில் மக்கள் அடிக்கடி பேசும் சிறப்பில்லாத சொற்களுக்குக்கூட, சுவைததும்பும் பாட்டு வடிவம் கொடுக்குமுடியும் என்று நிகரற்ற தம்மொழித்திறத்தை மிகத்தெளிவாகக் காண்பித்தார்கள். தனிப்பாடல்கள் இலக்கியவுலகில் உரைநடையை ஒக்கும். ஆதலால் காப்பியங்களில் தள்ளுபடியாகும் பல தமிழ்ச் சொற்களுக்குத் தனிப்பாடலில் நல்வரவு உண்டு. ஆத்தாள், அக்காள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/61&oldid=551059" இலிருந்து மீள்விக்கப்பட்டது