பக்கம்:இலக்கியச் சாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

வ.சுப. மாணிக்கனார்


.

கண்ணாலவோலை, சும்மா, வண்ணான், அம்பட்டன், தேங்குழல், அப்பம்,தோசை முதலான சொற்களைக் கொண்டு எத்துணையோ தனிப்பாடல்கள் இனிமை தருகின்றன.

தனிப்பாடல் செய்தாருள் சொக்கநாதப் புலவரும் ஒருவர் இவர் முருகனை நோக்கி, கொடிய இம்மானிடவுடம்பு தவஞ்செய்து இளைத்துக்காய்ந்த சுக்குப்போல் ஆகவேண்டும்; அதன்பின் சுடுகாட்டில் வெந்தால் என்ன கேடு? இவ்வுடலை மீண்டும் கொள்ள யாரும். விரும்பமாட்டார்கள்; சிறந்த வீட்டின்பத்தை நீர் அருளுக நான் இக்காயத்தை என்றும் தேடமாட்டேன்’ என்று வேண்டுகின்றார். திருவேரகத்து எழுந்தருளியிருக்கும் முருகனுக்குச் செட்டி என்பது பெயர். செட்டி என்றால் வணிகனையும் குறிக்குமன்றோ! இவ்வணிகச் சொல்லை.அடிப்படியாக வைத்துச் சொக்க நாதப்புலவர் ஒர். உருவகம் புனைகின்றார். அவர் உருவக வெண்பாவில் வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற மளிகைச் சொற்கள் நயமான கவியாக ஆவதைக் கேளுங்கள்:

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன இங்கார் கமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்துச் செட்டியா ரே. ஒரு மொழியின் இலக்கியம் இடையறாது வளர்கின்றது என்பதற்கும், ஒரு மொழிமக்கள் நீண்ட கலையுணர்ச்சி யுடையவர்கள் என்பதற்கும் காலந்தோறும் எழுகின்ற தனிப்பாடல்களே கண்ணாடியாகும். கற்றார் எல்லாரும் காப்பியங்கள் செய்துவிட முடியாது. ஆனால் சில நிகழ்ச்சிகளுக்கு அவ்வப்பொழுது தனிப்பாடல்கள் பாடி வாழ்க்கையில் அறிவின்பம் நுகரலாம். இவ்வின்பமும் சிறந்த இலக்கிய இன்பமேயாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/62&oldid=551060" இலிருந்து மீள்விக்கப்பட்டது