பக்கம்:இலக்கியச் சாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

63



மட்டும் உடைமையன்று. வஞ்சினம் என்பது புறத்திணையில் ஒரு புகழ்த்துறை. இத்துறையில் மறவர்கள் தம் பெருமையைத் தாமே எடுத்து அறைகுவர். பூதப்பாண்டியன், தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியன்,சோழன் நலங்கிள்ளி என்ற மூவர்தம் வஞ்சினப் பாக்களில் இல்லறப் பெருமை செங்கோற் பெருமை நட்புப்பெருமை குடிப்பெருமை என்றிவற்றைத்தம்வாயால்தாமே பறைசாற்றிக் கொள்வதைப் படிக்கின்றோம்.

மடங்கலிற் சினை.இ மடங்கா வுள்ளத்து அடங்காத் தானை வேந்தர் உடங்கியைந்து என்னொடு பொருதும் என்ப (புறம், 71)

படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையும் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாமென்று உறுதுப் பஞ்சாது உடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை (புறம். 72) என்றபடி வேற்று வேந்தர் தம் பெருமையைப் பறைசாற்றிக் கொள்வதைக் கேட்கப் பொறாமையையும் பார்க்கின்றோம்.' பகைவரை ஏசித் தம்மை ஏத்திக்கொள்வதெல்லாம் வீரப் பொது மரபு என்பதனால் இவற்றை நாம் குற்றமாகக் கொள்வதில்லை. ’துன்னருஞ் சிறப்பின் வஞ்சினம்’ என்று பாராட்டும் தொல்காப்பியம். தற்பெருமையும் பெருமிதமும்

இலக்கியத்தில் இன்னும் சில மரபுகள் உண்டு. சிலர் தம் பெருமையைத் தாம் சொல்லமாட்டார்கள். புலவனும் அவர்களை அங்ஙனம் சொல்ல வைக்கமாட்டான். அதற்காக அப்பெருமக்கள்தம் சிறப்பினைப் புலப்படுத்தாது இருக்க முடியுமா? அதனை இடம்வாய்த்துப்புலப்படுத்துவதற்கென்று வேறு சில பாத்திரங்களைப் புலவன் விடுவான்.

யாரென விளம்பு கேன்நான் எங்குலத் தலைவற் கும்மை வீரநீர் பணித்திர் என்றான் மெய்ம்மையின் வேலி போல்வான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/65&oldid=551063" இலிருந்து மீள்விக்கப்பட்டது