பக்கம்:இலக்கியச் சாறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

வ.சுப. மாணிக்கனார்



வார்கழல் இளைய வீரன் மரபுளி வாய்மை யாதும்

சோர்விலன் நிலைமை யெல்லாம் தெரிவுறச் சொல்லலுற்றான் இராம இலக்குவ அனுமன் முச்சந்திப்பில் இராமன் தான் யார் என்பதைத் தானே மொழியவில்லை. பக்கத்திருந்த தம்பி இலக்குவன் அண்ணனின் குடிப்பிறப்பு வேள்விக் காப்பு அரசுத்துறப்பு மனைவியிழப்பு எல்லாம் வரன் முறையாக உரைக்கின்றான்.

கற்புக்கடம் பூண்டஇத் தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால் என்று கண்ணகியின் கற்புப் பெருமையைக் கவுந்தியடிகள் மாதரிக்குச் சொல்வதும், இம்மைச் செய்தன யானறி நல்வினை என்று மாடலன் கோவலனது இளமைத் தொண்டுகளைச்சொல்வதும் எல்லாம் பிறர் வாய்ப்பெருமை யாகும்.

தற்பெருமையை வெளிப்படையாகச் சொல்ல

நாணினாலும் தனக்கு ஒரு பெருமையுண்டு என்ற எண்ணம் உள்ளத்தளவில் எல்லார்க்கும் கிடக்கின்றது.இவ்வுட்பெருமை தற்பெருமையாகாது. பெருமிதம் எனப்படும். பெருமிதம் என்பது கரைகடவா நீரொலி போன்றது.தற்பெருமை என்பது உள்ளது நீரையும் வற்றச் செய்து கரையைப் புரைப்படுத்தும் கதிர்ச் சூடு போன்றது. உள்ளோடும் பெருமிதம் வாழ்வுக்கு இன்றியமையாதது; என்றும் நம்பிக்கையூட்டுவது. அருள்மரபு

இதுகாறும் காதவிலும் வீரத்திலும் தற்பெருமை பேசும் இலக்கிய மரபுகளைப் பார்த்தோம். இதற்கு மாறாகத் தற்சிறுமை பேசும் மரபினை அருள் நூல்களில் பரக்கக் காணலாம். ஞானசம்பந்தர் முதலான அருளாளர்கள் எவ்வளவோ மருட்கை நிகழ்ச்சிகளைப் புரிந்தவர்கள். ஆற்றலிலும் அறிவிலும் புலமையிலும் நிகரற்றவர்கள். நாட்டையும் அரசையும் மன்பதையையும் மாற்றி அமைத்தவர்கள். உரமும் ஊற்றும் வழி வழி ஊட்டவல்ல பாடல்களை ஆயிரக்கணக்காக அருளியவர்கள். இவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/66&oldid=551064" இலிருந்து மீள்விக்கப்பட்டது