பக்கம்:இலக்கியச் சாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

65



பெரியவர்கள் நாயினும் சிறியவர்களாகத் தம்மைப் பழித்தும் இழித்தும் மடப்படுத்தியும் தாமே பாடிக் கொள்வானேன்? மாயத்தை அறிய மாட்டேன் மையல்கொள் மனத்த னாகிப் பேயொத்துக் கூகை யானேன் பிஞ்ஞகா பிறப்பொன் றில்லி

- (அப்பர்) நாயேன் பலநாளும் நினைப்பின்றி மனத்துன்னைப் பேயாய்த் திரிந்தெய்த்தேன் (சுந்தரர்) வஞ்சனையும் பொய்யுமுன்னே வைத்தழுக்கா றாயுளறும் நெஞ்சனுக்கு முண்டோ நெறிதான் பராபரமே (தாயுமானார்) மதிகெட் டறவா டிமயங் கியறக் கதிகெட் டவமே கெடவோ கடவேன் (அருணகிரிநாதர்) இங்ஙனம் அருட்புலவர்கள் தம்மைத் தற்சிறுமைப் படுத்திக் கொள்ளும் இடங்கள் பலப்பல; எனினும் மிகுதியாகத் தம்மைச் சிறுமை பேசியவர் மணிவாசகரும் பின்னர் இராமலிங்கரும் ஆவர். தேவாரங்களிலும் தற்சிறுமை இடங்கள் உள. திருவாசக அளவு அவற்றில் இல்லை. அதற்குக் காரணம் தேவாரம் சைவ இயக்கப் பாடல்; சமண பெள்த்த மதச் செல்வாக்குகளைத் தகர்த்துச் சைவத்தை நிலைநாட்ட வந்த பறைவுப் பாடல் தலந்தோறும் சென்று மக்களைத் திரட்டிச் சிவனது பெருமையையும் திருவருளையும் இசையொடு குழைத்துப் பாடிப் பரப்பிய மன்பதைப் பாடல்,

மனையறத்தில் இன்பமுறு மகப்பெறுவான் விரும்புவார் அனையநிலை தலைநின்றே ஆடியசே வடிக்கமலம் நினைவுறமுன் பரசமயம் நிராகரித்து நீறாக்கும் புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றும் தவம்புரிந்தார் என்று சேக்கிழார் ஞானசம்பந்தரின் பிறப்பை இவ்வுலகில் ஒர் இயக்கம் நடத்த வந்த பிறப்பாகவே, பரசமயத் தருக்கொழியச் சைவ முதல் வைதிகமும் தழைத்தோங்க வந்த பிறப்பாகவே, அயல் வழக்கின்துறைவெல்லவந்த தமிழ்ப்பிறப்பாகவே, சிவம் பெருக்க வந்த பிள்ளையாராகவே எடுத்துக் காட்டுதலைக் காண்கின்றோம். நாட்டில் எந்த யக்கம் பரப்பும் 岑 இ Լ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/67&oldid=551065" இலிருந்து மீள்விக்கப்பட்டது