பக்கம்:இலக்கியச் சாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வ.சுப. மாணிக்கனார்



பெரியவர்களும் மக்கள் முன் , தம்மை அடிக்கடி சிறியவர்களாகத் துரற்றிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படித் துாற்றிக் கொள்ளின் அது மக்கட்கு இனிக்காது, புரியவும் புரியாது. ஆதலாலன்றோ,

சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம் பந்தன் சொற்பாடி யாடக்கெடும் பாவமே (சம்பந்தர்) பொய்யாத் தமிழுரன் உரைத்தன வல்லார் மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே (கந்தரம்) என்று திருக்கடைக்காப்புச் செய்யுட்களில் சம்பந்தரும் சுந்தரரும் தம் பெயர் வரவும் பெருமை தோன்றவும் பாடியுள்ளனர். இப்போக்கு தற்பெருமையன்று; மக்கள் உள்ளத்துப் பதியுமாறு பாடிய பதிகமரபு என்று சுட்டி வருகின்றோம். திருவாசக மரபு

திருவாசகம் என்பது தனிநெறிப்பாடல்; உயிர்ப்பாடல். அஃது உயிரியக்கப் பாடலன்று; உயிரொடுக்கப் பாடல். 'இன்பே அருளி எனையுருக்கி உயிருண்கின்ற எம்மானே எனவும் ஊன் கெட்டு உயிர்கெட்டு உணர்வு கெட்டு என் உள்ளமும்போய் எனவும் வருதல் காண்க.திருவாசகத்தின் பல பத்துக்களுள் உயிருண்ணிப்பத்து என ஒன்று உண்டு என்பதும் நினையத்தகும்."உற்றாரையான்வேண்டேன்ஊர்வேண்டேன் பேர் வேண்டேன்’ என்றபடி, திருவாசகச் செய்யுட்கள் தன்னைப்பிறன் போற் கூறும் படர்க்கைநடையில் அமையாது, நாடக நடை எனப்படும் தன்மை நடையில், பெயர் சுட்டிக் கூறாது அமைந்துள்ளன. உயிரையே ஒடுக்க நினைத்தவர்க்குப் பெயரொடுக்கம் எம்மாத்திரம்? ஆதலின் மணிவாசகர் தம்மை யாரினும் யாதினும் சிறுபொருளாகப் பாடிக்கொண்டார். 'உலகத்தார் தூசியைக் காலின் கீழ் மிதிக்கின்றனர். உண்மை நாடி அத்துசியும் தன்னைத் தலைமேல் மிதிக்கும் அளவுக்குப் பணிந்து கிடக்க வேண்டும் என்பர் பெருமான்காந்தியடிகள். அருளாளர்களில் மணிவாசகர் போல் தம்மை இழிவாசகம் பேசிக் கொண்டவர் யாருளர்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/68&oldid=551066" இலிருந்து மீள்விக்கப்பட்டது