பக்கம்:இலக்கியச் சாறு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

67



சிட்ட னேசிவ லோக னேசிறு

நாயி னுங்கடை யாயவெங் கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து

காட்டி னாய்கழுக் குன்றிலே மூர்க்கன், கள்வன், கடியன், கலதி, பேயேன், ஆள்வாரிலி மாடு, கண்கெட்ட ஊரேறு, சழக்கனேன், ஊற்றையேன், புலையனேன் என்று கண்டவாறு தம்மைத் திட்டிக் கொள்கின்றார் மணிவாசகர். உலகில் இறப்ப இழிவாகக் கருதும் பொருள் நாய். மிகமிக இழிந்த தம்மை அந்நாயொடும் ஒப்பிட்டுக் கொள்ள விரும்பவில்லை. சில வகையில் நாயினம் உயர்ந்தது: எல்லா வகையிலும் தாம் இழிந்தவர். ஆதலின் தமக்கு எவ்வகை நாய் ஒப்பாகும் என்று காட்ட வேண்டி, நாய்க்குப் பல்வேறு அடை கொடுத்து ஒப்பாக்கிக் கொள்கின்றார். நாய் பெற்ற இடம் திருவாசகத்தில் யார் பெற்றார்? - -

1. 'யாதும் ஒன்றல்லாப் பொல்லா நாயான நீசனேனை’ 2. ஊர்நாயிற் கடையானேன் 3. “பொல்லா நாயான புன்மையேனை 4. நாணமில்லா நாயினேன். ( 5. ‘ஏண் நாணில்லா நாயினேன்’ 6. கீறிலாத நெஞ்சுடைய நாயினேன் z 'கடலினுள் நாய் நக்கியாங்கு 8. 'கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை’ 9. ஆதமிலி நாயேனை' 10. புறமே கிடந்து புலைநாயேன் புலம்புகின்றேன் 11. ஒன்றும் போதாநாயேனை 12. ‘நாயிற் கடையாமற் நாயேனை 13. புழுத்தலை நாய்போல இச்சையாயின. 14. நானார் அடியணைவான் ஒருநாய்க்குத் தவிசிட்டு’ 15. நாயினும் கடையாய வெங்கட்டனேனையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/69&oldid=551067" இலிருந்து மீள்விக்கப்பட்டது