பக்கம்:இலக்கியச் சாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு Ꮾ9

ஒதி னார்தமை வேறுகொண் டோதினான் கோது செய்குணக் கோதினுட் கோதனான் (சிந்தா. 240) என்று திருத்தக்க தேவர் பழித்துக் கூறுவர். ஆதலின் மணிவாசகர் தம்மைச் சிறுமையாகப் பாடிப் பழித்ததற்கு ஒரே ஒரு காரணம் இறைவனுக்கு நன்றி காட்டாமை என்று அவர் நினைப்பது. இதனால் அவருக்கு எழுந்த ஒரு முரட்டுத் துணிவினைப் பாருங்கள். நன்றியில்லாத நாயென்று தன்னைத் தெரிந்தும் ஆளலாமா? அங்ஙனம் ஆண்டவன் அறிவுடையவன் இல்லையாம், பேதையாம், என்ன துணிவு!

தாதாய் மூவேழ் உலகுக்குந் தாயே

நாயேன்தனை யாண்ட பேதாய் - என்று இறைவனையே பழிப்பது பார்த்து மணிவாசகரின் துணிவுக்கு முன் நாம் பின்வாங்குகின்றோம்.

ஞாலம் உள்ளளவும் மக்களுயிர் உள்ளளவும் நிலைக்கத். தக்க அன்புநூல் அருளிய மாணிக்கவாசகரே தம்மை நாயென்றும் பேயென்றும் மாடென்றும் இழிவு படுத்திக் கொள்வதைப் படிக்கும்போது, நாம் நம்முடைய சிறுமையை நினைத்துப் பார்க்க வேண்டும். இதுவே மணிவாசகருக்கு நாம் காட்டக்கூடிய செய்ந்நன்றி. வளமாக இருந்து பின் வறுமைவாய்ப் பட்டவர்களைக் காணுங்கால் நெஞ்சு உருகுகின்றது அல்லவா? அருள் வளமுடைய திருவாசக அடிகள் தம்மை நல்லது ஒன்றும் இல்லாப் பொல்லா வறியவராகச் சொல்லிக் கொள்ளும் போதும் அவ்வுருக்க வுணர்வு தோன்றுகின்றது. அதனால்தான் 'திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்ற பழமொழி எழுந்ததுபோலும். அடிகளார் தம்மை இவ்வளவு என்று இல்லாமல் இறப்பப் பழித்துக் கொண்டாலும்,

பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த மாசில் மணியின் மணிவார்த்தை என்று நாம் அறியோமா? 'தன்பெருமை தான் அறியாத் தன்மையன்காண்’ என்று அடிகள் ஆண்டவனுக்குக் கூறியதைத் திருவாசக அடியோங்களாகிய நாம் நம்மணிவாசக ஆண்டவனுக்குத் திருப்பிக் கூறினால் பொருந்தாதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/71&oldid=551069" இலிருந்து மீள்விக்கப்பட்டது