பக்கம்:இலக்கியச் சாறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

71



நாட்டின் தொகை போலப் பல கோடியர்ஆக இருந்தாலும், அக்கூட்டத்துக்குத் தலைவர் ஆவார் மூவரே.

1. “வான்வந்த தேவர்களும் மாலயனோடு இந்திரனும்’ 2. மாலயனோ டிந்திரனும் எப்பிறவியுந் தேட’ 3. “இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்’ 4. கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு' என்றபடி திருமால் நான்முகன் இந்திரன் என்னும் மூவர்களையே விதந்தெடுத்துக்குறிப்பாகப்பாடுபடுத்துகின்றது திருவாசகம். புரந்தரன்மால் அயன்பால் இருளாயிருக்கும் ஒளி' (73) என்ற திருக்கோவையாரிலும் இம்முப்பெயர்த் தொடரைக் காண்கின்றோம். . இம்மூவருள்ளுங்கூட, இந்திரன் சில இடங்களில் விடப்படுகின்றான். தலைமைத் தன்மை ஏனையிருவரைப் போல் அவன் பெறுவதில்லை.

1. அரியொடு பிரமற் களவறி யொண்னான்’ 2. பிரமன் மாலறியாப் பெற்றி யோனே' 3. பூமேல் அயனொடு மாலும் புகலரிதென்று” 4 அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்’ இவ்வாறு திருமாலும்பிரமனுமே திருவாசகத்தின்தாக்குதலுக்கு முற்பட ஆளாகின்றனர். திருக்கோவையாரிலும் 'நான்முகன் மாலறியாக் கடனாம் உருவத்து (77) என்ற இடத்து இந்திரனை ஒழித்தஇருகூட்டுகாணப்படுகின்றது.இவ்விருவரைக்கூறினால் ஏனைத் தேவர்களையும் சுட்டியதாகும் என்பது கருத்து. மாலையும் அயனையும் சேர்த்தே கூறும் பெருவழக்கு ஏற்பட்டமையின் பெயர் சொல்லாமலே இருவர் என்றால் இவ்விருதேவரையும் குறிக்கும் தொகை மரபு தோன்றலாயிற்று. “இருவரால் மாறு.காணா எம் பிரான் எனத் திருவாசகமும், “இருவர் அறியா அணிதில்லை யம்பலத்து எனத் திருக்கோவையாரும் இத்தொகை மரபை ஆண்டுள்ளன. சில இடங்களில் மாலும் பிரமனும் என, பிரமனும் மாலும் என முன் பின்னாகக் கூறப்பட்டாலும் இருவரையும் நிகராக வைத்தே திருவாசகம் தாக்குதல் தொடுக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/73&oldid=551071" இலிருந்து மீள்விக்கப்பட்டது