பக்கம்:இலக்கியச் சாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

வ.சுப. மாணிக்கனார்



'அயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம்' 'முன்னாய மாலயனும் வானவரும் தானவரும்' என இவ்வாறு தேவர் கூட்டத்தைக் குறிக்கும்போது, இருவரையுமே முதற்கண் மொழிந்து ஏனையோரைப் பொதுவாகக் கூறுதல் நினையத்தகும். புராணப்படி, திருமால் நான்முகனுக்குத் தந்தையாதலின், சில இடங்களில் திருமாலை மட்டும் குறிக்கும் மரபும் உண்டு.

1. முழுவதுங் கண்டவனைப் படைத்தான் முடிசாய்ந்து' 2. செங்கண் நெடுமாலும் சென்றிடத்துங் காண்பரிய 3. வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகனை’ 4. திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை’ இங்ஙனம் திருவாசகத்தில் சிலவிடங்களில் நான்முகனை விட்டுத் திருமாலை மட்டும் குறிப்பது போவே, திருக்கோவையும் ‘கருங்கண்ணனை அறியாமை நின்றோன்' (53) என்று குறிக்கும் போக்கினைப் பார்க்கின்றோம். எனினும் பொருட்பேற்றால் நான்முகனையும் கொள்ள வேண்டும் என்பது கதிர்மணி விளக்கப் பெரும்பேராசிரியர் பண்டிதமணியின் கருத்து. ‘முழுவதும் கண்டவனைப் படைத்தான்’ என்ற திருச்சதகப் பாடலுக்கு ‘அடிதேடிய திருமால் செய்தியை வெளிப்படையாகக் கூறவே, முடிதேடிய பிரமன் செய்தியும் குறிப்பாகப் புலப்படுத்திய படியாம் என்று மொழிகுவர் பண்டிதமணியார். ஆதலின் தேவக் குழுவிற்குத் திருமாலும் பிரமனும் தலைவர் ஆவர் என்று தெளியலாம். ஆணவ முனைப்பு

திருமாலையும் நான்முகனையும் தலைமையாக எண்ணித் திருவாசகம் தாக்குதற்குக் காரணம் என்ன? சிவபெருமானைக் காணுவோம் என்ற முனைப்பை மேற்கொண்டு ஏனைத் தேவர்கள் செய்த முயற்சிகள் வெளிப்படையாகத் தெரியவில்லை. சிவனைக் கண்டு காட்டுவோம் என்ற ஆணவ முனைப்பில் திளைத்தவர்கள் அரியும் அயனுமே. திருமால் பன்றியுருவெடுத்துச் சிவன் திருவடியைக் காண முனைந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/74&oldid=551072" இலிருந்து மீள்விக்கப்பட்டது