பக்கம்:இலக்கியச் சாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

75



- - - சிவபெருமான் எத்தேவர்க்கும் அரியவன், எட்டாதவன் என்ற கருத்துக்கோள் திருவாசகம் முழுதும் பரவிக் கிடக்கின்றது. தேவர்கள் சிவனை வழுத்த வில்லையா? வணங்கவில்லையா? பரவவில்லையா?

போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்று அடிமுடி யறியும் ஆதர வதணிற் கடுமுரண் ஏனம் ஆகி முன்கலந்து ஏழ்தலம் உருவ இடந்து பின்எய்த்து ஊழி முதல்வ சயசய என்று வழுத்தியும் காணா மலரடி யிணைகள் என்ற போற்றித் திருவகவலால், திருமால் முதற்கண் தன் முனைப்போடு பன்றிவடிவெடுத்துச் சிவனடியைக் காண முயன்று இளைத்தான் எனவும் பின் தன் முயற்சி பயன்படாதது கண்டு போற்றி வழுத்தினான் எனவும் அங்ஙனம் வழுத்திய பின்னும் மலரடிகளைக் காண முடியவில்லை எனவும் அறிகின்றோம். தன் முனைப்புக்கு மலரடியைக் காட்டாதது பொருத்தம். தொழுத பின்னும் காட்டாதது பொருத்தமா? என்பதனைச் சிந்திக்க வேண்டும். இறைவனை அடைதற்கு அன்பு நெறிதான் தக்கது என்று தெரிந்திருந்தும், முதற்கண் அதனையன்றோ பின்பற்றியிருக்க வேண்டும்? மனித இனத்துக்கு இது தெரியாமல் இருக்கலாம். உயர்ந்த வானவர்க்குத் தெரியாது என்று சொல்ல முடியுமா? ஒருவழி பயன்படாதபோது, இன்னொரு வழியை மேற்கொள்வது வினைசெயல்வகை என்று ஆகுமேயன்றிப்பத்திநெறியாகாது. தன்னலத் தேவர்கள்

தேவர்களை மணிவாசகர் ஏன் இடமெல்லாம் இழிவுபடுத்துகின்றார்? இன்னாச்சொல் தொடுக்கின்றார்? இளிமை பேசுகின்றார் என்பதற்குப்புறத்தே காரணங்கள் தேட வேண்டுவதில்லை. திருவாசகத்திலே காரணப் பாடல்கள் உள. அடிமுடி தேடிய புராணத்தால் ஆணவக் குற்றமும், தக்கன் வேள்வியில் கலந்து கொண்டதனால் சிவனை மதியாக் குற்றமும் வெளிப்படுகின்றன. இன்னொரு பெருங் குற்றமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/77&oldid=551075" இலிருந்து மீள்விக்கப்பட்டது