பக்கம்:இலக்கியச் சாறு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

வ.சுப. மாணிக்கனார்



தேவ இனத்துக்கு உண்டு. தண்ணிர் உயருந்தோறும் கரையை உயர்த்தவேண்டும்; மரம் நீளுந்தோறும் அடியைக் கனப்படுத்த வேண்டும். உயர்ந்தோர் உயரவுயரத் தாழ்ந்தவர்களையுங்கூட உயர்த்திக் கொண்டு செல்லவேண்டும். இவ்வாறு கீழ் நிலையையும் சேர்த்து உயர்த்தாவிட்டால் வெற்றுயர்வு வீழ்ச்சியைத் தந்துவிடும். இவ்வுயர் பண்பு தேவர்கள் பால் இல்லை.

வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனநின்பால் தாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மையெல்லாம் தொழவேண்டிச் - சூழ்த்தமது கரமுரலும் தாரோயை நாயடியேன் பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானுமுன்னைப் பரவுவனே இத்திருவாசகம் வானவர்களை முழுத் தன்னலத்தார் என்று குற்றம் சாட்டுகின்றது. இக்குற்றம் தனித்தன்னலம் எனவும் பிறர்வழித் தன்னலம் எனவும் இருவகைப்படும். வானவர்கள் தாம் வாழ வேண்டும் என மொழியால் போற்றுகின்றார்கள். ‘வேண்ட முழுதும் தருவோய் நீ என மணிவாசகரும்’ ‘வேண்டுவார்க்கு வேண்டுவதே ஈவான் கண்டாய்” என நாவுக்கரசரும் வழிகாட்டியிருத்தலின் தன்னல வேண்டுகோள் குற்றமாகாது என்று ஒருவாறு கொள்ளலாம். தாம் வாழவேண்டும் என்ற ஓரளவில் தேவர்களின் இறைவணக்கம் இருக்குமாயின் மணிவாசகர் விட்டு விடுவார். தாம் என்றும் உயர்ந்துகொண்டே செல்ல வேண்டும் எனவும் பிறவுயிரெல்லாம் தமக்குக் கீழாக நின்று தொழுது கொண்டே இருக்கவேண்டும் எனவும் ஒர் அதிகார வெறி வேதர்கட்கு இருப்பதைத் திருவாசகம் எடுத்துக்காட்டுகின்றது.மனமொழி மெய்களால் தொழும்போது, ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள என்றபடி முக்கருவிக்கும் ஒரு நோக்கமே இருத்தல் வேண்டும்.நாம் வானவரிடத்துக்காண்பது என்ன?மொழியால் இறைவனைப் போற்றும்போது தாம் வாழ வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். மொழியினும் சிறந்த மனக்கருவியால் இறைவனைப் பணியும்போது எல்லா உயிரும் தமக்கு அடிபணிந்து தம் முயர்வுக்காகப் பாடுபட வேண்டும் என்பது அவர்தம் நோக்கம். வழிபாட்டில் மொழியொன்றும் மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/78&oldid=551076" இலிருந்து மீள்விக்கப்பட்டது